ஒரு வேண்டுகோள்

பேசாமொழியில் எழுத இருக்கும் என்னுடைய லத்தீன் அமெரிக்க சினிமா தொடருக்காகக் கீழ்க்காணும் இரண்டு படங்கள் தேவைப்படுகின்றன, with English subtitles.  கிடைத்தால் சொல்லுங்கள்.  டிவிடி கிடைத்தால் சிலாக்கியம்.  பென் ட்ரைவில் இருந்தாலும் பிரதி எடுத்துக் கொண்டு கொடுத்து விடுவேன்.  இயக்குனர் பெயர்: Nelson Pereira dos Santos படங்களின் பெயர்: barren lives. the third bank of the river தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

ராஜாஜி நடத்திய ஸ்வராஜ்யா… மீண்டும்…

நேருவின் இடதுசாரிக் கொள்கைகளுக்கு எதிராக 1956-இல் ராஜாஜி மற்றும் சுப்பராவ் இருவராலும் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை ஸ்வராஜ்யா.  1972-இல் ராஜாஜியின் மரணத்துக்குப் பிறகு ஸ்வராஜ்யா அதன் முக்கியத்துவத்தை இழந்தது.  பின் 1980-இல் நின்று போனது. இந்தியா இன்று மனித வாழ்க்கைக்கு லாயக்கில்லாத இடமாக மாறிப் போனதற்குக் காரணம் இதுவரை இங்கே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி.  முக்கியமாக நேரு.  கம்யூனிஸ்டுகள் இந்தக் கட்சிக்கு மாற்றாக இருந்திருக்கலாம்.  ஆனால் அவர்கள் காங்கிரஸின் துணைக் கட்சியாகவே செயல்பட்டு ஆதாயம் அடைந்தார்கள்.  காங்கிரஸுக்கு … Read more