பூச்சி

என்னிடம் ஒரு பூச்சி இருந்தது. அழகான கவர்ச்சியான பூச்சி. அதை சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தேன். நடைப் பயிற்சிக்கெல்லாம் அழைத்துப் போவேன். பலரும் பாராட்டினார்கள். பாராட்டப் பாராட்ட சீராட்டல் மிகுந்தது. ஒரே ஒரு யதி சொன்னார், பூச்சிதான் உன் சத்ரு என. கேட்கவில்லை நான். ஒரு கட்டத்தில் என் இதயத்தில் பாதியைத் தின்று போட்டது பூச்சி. பதிலுக்கு நானும் கொன்று போட்டேன் பூச்சியை. பாதி இதயத்தோடே வாழவும் பழகிக் கொண்டேன். இப்போது என் நண்பன் அதே பூச்சியை … Read more

பணத்தை எப்படி நீங்கள் கையாளுகிறீர்கள்?

சமீபத்தில் ஒரு சிங்கப்பூர் அன்பர் போன் செய்தார்.  ஒரு ஸூம் சந்திப்பில் இரண்டு மணி நேரம் பேச வேண்டும்.  கால் மணி நேரம் என் பேச்சு.  மீதி நேரம் கேள்விகளுக்கு பதில்.  தேதி ஒத்து வந்ததால் உடனடியாக சரி என்று சொல்லி விட்டேன்.  எனக்கு ரொம்பப் பிடித்தது, வாசகர்களோடு – என்னை வாசிக்காதவர்களோடும் – உரையாடுவது.  அப்படித்தான் முதலில் ரமா சுரேஷின் மாயா இலக்கிய வட்டத்திலும் பிறகு அரூ இதழின் குழுவினருக்காகவும் ஸூம் மூலமாக சந்திப்பில் கலந்து … Read more

ஒரு வித்தியாசமான அனுபவம்…

வாழ்வில் இரண்டு முறை இப்படி நடந்திருக்கிறது.  பல ஆண்டுகளுக்கு முன்பு உன்னத சங்கீதம் என்ற சிறுகதையை ஒரு மாத காலம் ஒரு அறையில் அடைந்து கிடந்து எழுதினேன்.  கிட்டத்தட்ட ஒரே அமர்வு என்றே சொல்ல வேண்டும்.  அறையை விட்டு வெளியே வந்தது உறங்கவும் உண்ணவும் குளிக்கவும் மட்டுமே.  ஒரு சிறுகதையை எழுதவா இத்தனை பிரயாசை என்று தோன்றும்.  அந்தக் கதையைப் படித்தால் அர்த்தம் விளங்கும்.  பலராலும் தூஷிக்கப்பட்ட கதை.  சிலரால் கொண்டாடப்பட்ட கதை.  எனக்கு ரொம்பப் பிடித்த … Read more

இன்று முகமூடியிலிருந்து மூன்று பகுதிகளை வாசிக்கிறேன்…

இதை வாசிக்கும் நண்பர்கள் தயவுசெய்து இந்தச் செய்தியை நண்பர்களிடையே பகிர்ந்தால் நலம். இன்று மாலை ஆறு மணிக்கு ஃபேஸ்புக் லைவ்-இல் என்னை நீங்கள் சந்திக்கலாம். ஒரு மணி நேரம் பேசுவேன். உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். கேள்வி ஒன்றுதான் வந்துள்ளது. காமெண்ட்டில் கேள்வி கேட்கலாம் என்று நினைத்திருப்பீர்கள். நான் பேசும்போதுதானே கேள்விகள் தோன்றும்? அதுவும் சரிதான். ஆனால், நான் பேசிக் கொண்டே காமெண்ட் பாக்ஸைப் பார்ப்பது எனக்குக் கஷ்டம். உதவிக்கு முத்துக்குமார்தான் வழக்கமாக வருவார். அவர் கேள்விகளை … Read more

19.2.2021 facebook live

நாளை வெள்ளிக்கிழமை (19.2.2021) மாலை ஆறு மணிக்கு ஃபேஸ்புக் லைவ்-இல் பேசுகிறேன். தலைப்பு முகமூடிகளின் பள்ளத்தாக்கு. நீங்கள் காமெண்ட் பாக்ஸில் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தருவேன். கேள்விகள் இருந்தால் எனக்கும் எழுதலாம். முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள்.charu.nivedita.india@gmail.com