இது மண்டேலா விமர்சனம் அல்ல…

என் முக்கியமான நண்பர் மண்டேலா பார்க்கச் சொன்னார். ”உங்களுக்கு ரொம்பப் பிடிக்கலாம்; அல்லது, கழுவியும் ஊற்றலாம்; ஆனால் பாருங்கள்” என்றார். எனக்கும் தியாகராஜாவை எழுதி எழுதி கொஞ்சம் ஆசுவாசம் தேவைப்பட்டது. ஆனால் ஐந்து நிமிடத்துக்கு மேல் மண்டேலாவைத் தொடர முடியவில்லை. இத்தனைக்கும் பாபு யோகி எனக்குப் பிடித்த நடிகர். பொதுவாக கமர்ஷியல் மசாலா படங்களில் எனக்குப் பிரச்சினையே இருப்பதில்லை. சர்க்கார் என்று ஒரு படம். எனக்கு விஜய் படங்கள் என்றால் பிடிக்கும். கோவிலில் செருப்பைக் கழற்றி செருப்பு … Read more

அஜித் – மீண்டும்

அஜித் தன்னோடு செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்ஃபோனைப் பிடுங்கி எறிந்தார். கேட்டால், என் அனுமதி இல்லாமல் ஏன் எடுத்தார் என்பார். இவ்வளவுதான் இந்த நடிகர்கள். ஆனால் பெரிய கனவான் வேஷம் போடுவார்கள். எல்லாமே வேஷம்தான். இவர்களால் வீதிக்கு வந்து ஒரு க்ஷணம் கூட நாகரிகமாக நடந்து கொள்ள இயலாது. எதிராளி நாகரிகம் காக்கவில்லையே என்று சொல்ல முடியாது. அந்த ரசிகர்களின் பணத்தில்தானே பத்து கோடி இருபது கோடி என்று சம்பளம் வாங்குகிறீர்கள்? உங்களுடைய சம்பளம் என்ன … Read more

தமிழும் மலையாளமும்

பிஞ்ஜ் செயலியில் பாராவின் தொடர்கதையும் என்னுடைய தொடரும் வருகின்றன. அவரை 1000 பேரும் என்னை 926 பேரும் இன்று காலை வரை படித்துள்ளனர். தன் தொடருக்கு வாராவாரம் விமர்சனம் எழுதுபவர்களுக்கு தொடர் முடிந்து விருந்து கொடுப்பதாக எழுதியிருக்கிறார் பாரா. இதற்குப் போட்டியாக என்ன செய்யலாம் என்றால் படிப்பவர் அத்தனை பேருக்குமே ஒரு பாட்டில் ரெமி மார்ட்டின் கொடுக்கலாம். பணத்துக்குத்தான் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் கேரளத்தில் என்ன நிலைமை தெரியுமா? பென் யாமின் எழுதின ஆடு ஜீவிதம் … Read more

அ-காலம்

பின்வரும் பிஞ்ஜ் செயலியில் அ-காலம் என்ற தொடரை எழுதி வருகிறேன். என்னுடைய நெருங்கிய நண்பர்களே யாரும் அந்தத் தொடரைப் படிக்கவில்லை என்று தெரிந்தது. இன்னும் நானே படிக்கவில்லை. நான் எழுதியதை நான் கண் கொண்டும் பார்க்க மாட்டேன் என்றாலும் இந்த செயலி ஒரு புதிய தொழில்நுட்பம் என்பதால் சற்றே ஆர்வம் ஏற்பட்டது. என்னுடைய ஐஃபோனில் இந்த செயலி இன்னும் செயல்படத் தொடங்கவில்லை. ஆனால் ஆண்ட்ராய்ட் போனில் இந்தச் செயலி வருகிறது. ஸ்ரீராம் படித்து விட்டார். அவரைத் தவிர … Read more

தாலியறுத்தான் கதை

(எச்சரிக்கை: இந்தக் கதையின் மாடல் ஏற்கனவே எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவலிலும் எக்ஸைல் நாவலிலும் வந்துள்ளது.  கதாபாத்திரத்தின் பெயர் தனபால். தனபால் மிக இளம் வயதில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டவன்.  பாப்பாத்தியம்மாள் சாராய பாட்டில்களைக் கடத்தும் போது இவனும் கூடப் போனதால் இவன் சிறுவர் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.  அவன் சொன்ன கதைகளே இதில் வந்துள்ளன.  அவன் சொன்ன கதைகளை நான் அந்த நாவல்களில் சேர்க்கவில்லை.  எல்லாம் 55 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை.  அந்த … Read more