எட்டி எழுகவென்றறம்!
ஜெயமோகன் எழுத்துகளை நான் கொஞ்சம்தான் படித்திருக்கிறேன். அநேகமாகத் தமிழ் தெரிந்த யாருமே இப்படித்தான் சொல்லிக் கொள்ள முடியும். அவர் அத்தனை எழுதியிருக்கிறார். நான் படித்த கொஞ்சத்தில் அறம் ஒரு மறக்க முடியாத கதை. ஏனென்றால், அது என் கதை. அதில் வரும் ஒரு எழுத்தாளன் நான்தான். ஜெயமோகன் கற்பனை பண்ணினது வேறு நபர். ஆனால் படித்த எனக்கு அது நான் என்று தோன்றியது. காரணம், அதை நான் வாழ்ந்திருக்கிறேன். அந்தக் கதையில் ஒரு ஆச்சி வருகிறாள். என் … Read more