நான்தான் ஔரங்கசீப்… சந்தேகங்களும் கேள்விகளும்…

நான் தான் ஔரங்கசீப்… நாவல் பற்றிய தங்களுக்கு சந்தேகங்களும் கேள்விகளும் இருந்தால் அவற்றை அந்த பிஞ்ஜ் செயலியிலேயே கேட்கலாம். நான் இங்கே ப்ளாகில் பதில் தருகிறேன். அங்கே எனக்கு விரிவாகத் தட்டச்சு செய்யத் தெரியவில்லை. ஒற்றை விரலில் தமிழில் தட்டுவது கடினமாக உள்ளது. ஒரு நல்ல இஸ்லாமியர் புனித ரமலான் மாதத்தில் போர் செய்ய மாட்டாரே என்று கேட்டிருக்கிறார் நஸீர் அஹ்மத். உண்மைதான். ஔரங்கசீப் மார்க்கத்துக்கு மிக மிக உண்மையாக வாழ வேண்டும் என்று நினைத்தார். அதன்படியே … Read more

அகர முதல்வியின் முதன்மைப் புதல்வனுக்கு வந்தனம்…

காட்சி ஒன்று: நண்பர்கள் சிலர் திருவல்லிக்கேணி ஜானிஜான் கான் ரோட்டில் உள்ள ஒரு பேச்சிலர்ஸ் லாட்ஜில் ஒரு ரூமில் வைத்துத் தண்ணியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  காலை பதினோரு மணி.  எல்லோரும் எழுத்தாளர்கள்.  அவர்களில் அடியேனும் ஒருவன்.  மாலை ஐந்து மணி அளவில் நண்பர்களில் ஒருவர் என்னைப் பார்த்து “உங்களோட ஸீரோ டிகிரியே பிரேம் ரமேஷ் ரெண்டு பேரும் எழுதிக் கொடுத்ததுதானே?” என்கிறார்.  அவர் யார் என்றால் நான் வளர்த்தவர்.  குமுதம் படித்துக் கொண்டிருந்தவருக்கு லத்தீன் அமெரிக்க இலக்கியமும் புதுமைப்பித்தனும் … Read more

ஷா உமரி வசனங்கள்

நேற்று சீனிக்கு ஒரு நண்பர் ஒரு செய்தி அனுப்பியிருந்தார்.  சாரு பாராட்டியவர்களிலேயே அவரை முதுகில் குத்தாத ஒரே ஆள் நீர்தான் என்று. சீனி விஷயத்தில் அது ஒருபோதும் நடவாது.  சீனியை எனக்கு நன்றாகத் தெரியும்.  சீனி மட்டும் அல்ல.  அதுபோல் இன்னும் ஓரிருவர் கூட உள்ளனர்.  காயத்ரி.  ஒருவரைப் பிரிய நேர்ந்தால் கூட மௌனம் காப்பாளே தவிர முதுகில் குத்தும் பண்பெல்லாம் அவளுக்கு சுத்தமாகத் தெரியாது.  யாரையும் மன்னிக்கும் மாண்பு கொண்டவள்.  அவள் அளவுக்கு மன்னிக்கும் தன்மை … Read more

மேலே ஆக வேண்டியதைப் பார்ப்போம்…

கடந்த இரண்டு தினங்களில் நடந்த அக்கப்போர்களை மறந்து விடுங்கள். எல்லோருக்குமே வேலை இருக்கிறது. இந்த விஷயத்தில் என் சார்பாகப் பேசிய அத்தனை சக எழுத்தாளர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி. எழுதாதவர்களும் என் அன்புக்குரியவர்களே. எழுதாதவர்கள் இது போன்ற அக்கப்போர்களில் எப்போதுமே குரல் கொடுக்காதவர்கள். அப்படிக் குரல் கொடுப்பது பைத்தியக்காரத்தனம் என்று நினைப்பவர்கள். எப்போதும் அமைதி காக்கும் சில எழுத்தாளர்கள் கூட இப்போது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்கள். பெருந்தேவி, லதா ராமகிருஷ்ணன் போன்றோர். அவர்களுக்கும் என் நன்றி. … Read more

நான்தான் ஔரங்கசீப்…: ஓர் அறிவிப்பு

ஔரங்கசீப் நாவலுக்கு நான் எதிர்பாராத அளவுக்கு ஆதரவு குவிகிறது. நிச்சயமாக இந்த அளவுக்கு எல்லோருக்கும் பிடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், இந்த வகைமையில் நான் இதுவரை எழுதியதில்லை. தன்னம்பிக்கை இல்லாமலேயேதான் எழுதினேன். எல்லோருக்கும் பிடித்தது மகிழ்ச்சி. அதை விட ஆச்சரியம், எல்லோரும் தினம் ஒரு அத்தியாயம் வேண்டும் என்று கேட்கிறார்கள். எழுதலாம்தான். தினம் 1000 வார்த்தைகள் எழுத முடியாதா என்ன? ஆனால் பயமாக இருக்கிறது. சமயங்களில் ஆய்வுக்காக நாள் கணக்கில் படிக்க வேண்டியிருக்கிறது. இப்போது பாரதத்தில் … Read more

அவதூறுக்கு எதிர்வினை (18): ஜ்யோவ்ராம் சுந்தர்

You are a great writer, Charu! Not a word more, not a word less. ஏற்கனவே எழுதியிருக்கேன். எனக்குப் பல மேலை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது சாருதான். லவ் யூ தல! கவன ஈர்ப்பிற்காகச் சில சில்வண்டுகள் துடிக்கவே செய்யும். ஆனால், உங்க சாதனை! மறுபடி, லவ் யூ சாரு! நீங்க என்னோட முக்கியமான ஆசிரியர். எப்போதும் என் மரியாதைக்குரியவர்.