வசந்த் சாய் – பாயசம்

நவரசாவில் இடம் பெற்றிருக்கும் எட்டு படங்களையும் பற்றிய விமர்சனங்களைப் பார்த்து விட்டு அந்த எட்டையும் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். என் நண்பர் வசந்த்தின் பாயசத்தை மட்டும் இன்னும் இரண்டொரு நாள் கழித்துப் பார்க்கலாம் என்று திட்டம். ஔரங்கசீப் நாவலில் மூழ்கிக் கிடப்பதால் அப்படி நினைத்தேன். ஆனால் இடையில் செய்த ஒரு பிழையால் உடனடியாக வசந்த் சாயின் பாயசம் மட்டும் பார்த்தேன். என்ன பிழை என்றால், பிரபு காளிதாஸின் விமர்சனத்தை என் முகநூல் பக்கத்தில் ஷேர் … Read more

பாலகிருஷ்ணனிடமிருந்து பாரதக் கதைகள்…

விவரங்கள் விளம்பரத்திலேயே இருக்கின்றன. பாலகிருஷ்ணன் ஒரு புகழ் பெற்ற நாடகக் கலைஞர். அதே சமயம் இதிகாசங்களை விளக்குவதில் மாஸ்டர். அவருடைய முந்தைய தொடர் சொற்பொழிவையும் கேட்டிருக்கிறேன். பிரமாதமாக இருந்தது. இணைந்து கொள்ளுங்கள். ஐந்து உரைகளுக்கு 1000 ரூ. தான். விவரம் இதில். நானும் பணம் கட்டி விட்டேன். உரை ஆங்கிலத்தில் இருக்கும். புரியும் விதமான ஆங்கிலம்தான். பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆங்கிலம் அல்ல.

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து…

தற்சமயம் என் எதிரிகள் பா. ராகவன், அபிலாஷ், ஜெயமோகன் மூவரும்தான்.  ஏனென்றால், இந்த மூவரும் எழுதியவைகளுக்குத்தான் உடனுக்குடனே ஆவேசமாக என்னுள் பதில்கள் கிளர்ந்து எழுகின்றன.  அது என் ஔரங்கசீப் வேலையைக் கெடுக்கிறது.  இப்போது சொல்லுங்கள், மூவரும் என் எதிரிகள்தானே?  ஆனால் மூவரும் என் மிக நெருங்கிய நண்பர்கள்.  மூவருக்கும் ஒரு ஒற்றுமையும் உண்டு.  போன்.  இப்போதெல்லாம் பாரா கொஞ்சம் திருந்தி விட்டார்.  காலையில் பண்ணினால் மாலையில் திரும்ப அழைத்து விடுகிறார்.  ஜெயமோகனிடமும் அபிலாஷிடமும் என் தோல்வியை ஒப்புக் … Read more

ஒரு கோப்பை ஒய்ன்…

சமீபத்தில்தான் கவனித்தேன். நான் இணைய தளத்தில் எழுதினால் காசு வருகிறது. எழுதாவிட்டால் வருவதில்லை. ஆகா, எத்தனை அட்டகாசமான விஷயம். கடந்த ஒரு மாதமாக ஔரங்கசீப் காரணமாக, இணைய தளத்தில் எழுதுவதில்லையா? சந்தா/நன்கொடையும் வருவதில்லை. ரொம்பவும் சந்தோஷமாகி விட்டது. ஆக, எழுதினால் சம்பாதிக்கலாம் என்ற உறுதி இருக்கிறது. சமீபத்தில் என் தோழியிடம் சொன்னேன். பணத்தைக் கிட்டத்தில் வைத்துக் கொண்டு பெண்களை தூரத்தில் வைத்து விட்டேன். ஆகா, நல்ல விஷயம் என்றாள். என்ன ஒரு சேடிஸம். என் பத்து இருபது … Read more

ஓர் உருவகக் கதை

”தேன், பஞ்சாமிர்தம், இருட்டுக்கடை ஹல்வா மூன்றும் இருக்கிறது.  எதைச் சாப்பிட?” என்று என்னிடம் கேட்டான் ஒருத்தன்.  நடந்து பல வருடங்கள் ஓடி விட்டன.  ஒவ்வொன்றாகச் சாப்பிடு என்றேன்.  ஒன்றே ஒன்றுதான் சாப்பிட முடியும், எதைச் சாப்பிட என்றான்.  உனக்கு எது பிரியமானதோ அதைச் சாப்பிடு என்றேன்.  அது எனக்குத் தெரியாதா, அனுபவசாலி என்பதால்தானே உங்கள் கருத்தைக் கேட்கிறேன் என்றான்.  அனுபவம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுமேப்பா, சரி, மூன்றாவதையே சாப்பிடு என்றேன். சாப்பிட்டவன் செத்து விட்டான். அவனுடைய கடைசி அழைப்பு … Read more