கருட கமனா ரிஷப வாஹனா மற்றும் ஒரு மொட்டையின் கதை : கன்னட சினிமாவின் பெரும் பாய்ச்சல்

நாம் கேள்வியே பட்டிருக்காத – எழுத்து உரு கூட இல்லாத – ஏதோ ஒரு ஆதிவாசி மொழியில் எடுக்கப்பட்ட முதல் சினிமா எப்படி இருக்கும்?  நேற்று வரை அப்படித்தான் நான் கன்னட சினிமா பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.  பி.வி. காரந்த் இயக்கத்தில் வெளிவந்த சோமன துடி (1975), கிரிஷ் காஸரவள்ளியின் கட ஷ்ரத்தா (1977), தபரண கதெ (1986)  போன்ற கிளாஸிக்குகள் விதிவிலக்கு.  அப்படிப்பட்ட விதிவிலக்குகள் எந்த மொழியிலும் எந்த நேரத்திலும் தன்னிச்சையாக நிகழலாம்.  தெலுங்கு சினிமா … Read more

புஷ்பா : பெருந்தேவியின் எதிர்வினை

சாரு இக்கட்டுரையில் அல்லுவின் உடல்மொழி குறியீடு குறித்து எழுதியிருப்பது முக்கியம். புஷ்பாவைப் பார்க்கும்போது எனக்கும் அனுராக் காஷ்யப்பின் கேங்க்ஸ் ஆஃப் வஸேபூர் நினைவுக்கு வந்தது. அப்படி வந்திருக்க வேண்டிய படம் இது. காஷ்யப்பின் படத்தில் பகைக் குழுக்கள், கதாபாத்திரங்களுக்கு இடையிலான dynamics அற்புதமாக இருக்கும். புஷ்பாவிலோ நாயக ஆராதனை மட்டும்தான். புஷ்பா சின்னப் பையனாக இருக்கும்போதே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பதாக ஃப்ளாஷ்பேக்கில் காட்டுவதெல்லாம் நம் மண்ணுக்கே உரித்தானது. என் கவிதைக்கு விதையே அந்தக் காட்சிதான். … Read more

புத்தகங்கள் சலுகை விலையில்…

என் இனிய நண்பர்கள் ராம்ஜியும் காயத்ரியும் நடத்தும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. அதன் கொண்டாட்டமாக 30 சதவிகிதத் தள்ளுபடியில் எல்லா புத்தகங்களும் கிடைக்கின்றன. வாங்கிப் பயனடையுங்கள். இன்னும் கொஞ்ச நாளில் முழு அடைப்பு இருக்கலாம் என்கிறார்கள். வீட்டுத் தனிமையைப் போக்க வாசிப்புதான் ஒரே வழி. அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். லிங்க்: https://zerodegreepublishing.com/collections/charu-nivedita

புஷ்பா – ஒரு லும்ப்பன் கிளாஸிக்

புஷ்பாவுக்கு ஆறு வயது புஷ்பா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறான் புஷ்பாவுக்கு அப்பன் பெயர் கிடையாது என்றொருவன் அறிவிக்கிறான் புஷ்பா சிணுங்கி அழுகிறான் புஷ்பா ரௌடியாகிவிட்டான் புஷ்பா கால் மேல் போட்டு உட்கார்ந்திருக்கிறான் புஷ்பாவுக்கு அப்பன் பெயர் இல்லை என்றொருவன் அறிவிக்கிறான் புஷ்பா குமுறி எழுந்து அவனை அடிக்கிறான் புஷ்பா பெரிய தாதாவாகிவிட்டான் ரௌடிகள் புடைசூழ போலிசுக்குக் கப்பம் கட்டுகிறான் புஷ்பா அப்பன் பெயர் தெரியாதவன் என்றொருவன் அறிவிக்கிறான் புஷ்பா இறுக்கி மூடிய கைக்குள் தன்னைத் … Read more

ஒரு புள்ளிவிவரம்

அமெரிக்காவில் வசிக்கும் என் சிநேகிதி ஒருவர்.  அவர் வசிக்கும் நகரில் மெட்ரோ இல்லை.  கார்தான் ஒரே வாகனம்.  அவருடைய ஊதியத்தில் கார் வாங்க முடியவில்லை.  அதனால் அதிக அளவு போக்குவரத்து இல்லை.  இரவிலோ வெளியிலேயே போக முடியாது.  கறுப்பின, விளிம்பு நிலை மனிதர்களின் தொல்லை.  ஆனால் தமிழக உறவினர்களோ “அவள் அமெரிக்காவில் பெரிய வேலையில் இருக்கிறாள், கூரையைப் பிய்த்துக் கொண்டு டாலர் கொட்டுகிறது” என்றே நினைக்கிறார்கள்.  இது அந்தப் பெண் சொன்னது.  இப்படி ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே … Read more

மார்கழி வீதி பஜனை

அற்புதமான ஒரு வீதி பஜனை. இதற்குத்தான் மைலாப்பூரில் இருப்பது. ஒருமுறையாவது இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பார்க்கிறேன். வாய்ப்பதில்லை. அடுத்த ஆண்டாவது கலந்து கொள்ள வேண்டும். இளைஞர்களையும் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. என் வீட்டிலிருந்து ஒரு ஐந்து நிமிட தூரத்தில்தான் இந்தத் தெரு இருக்கிறது. தாத்தாக்கள் அனைவரும் தாடிக்கு முகக் கவசம் அணிந்திருக்கிறார்கள். புரிந்து கொள்ள முடிகிறது. முகக் கவசம் அணிந்தால் மூச்சின் ஆவி கண்ணாடியில் படிந்து பார்க்க முடியாமல் போய் விடுகிறது. இந்தத் தகவலை … Read more