ஒரு அவதூறும் அதற்கான பதிலும்…

நேற்றே எழுதியிருக்க வேண்டும்.  ஔரங்ஸேப் அத்தியாயத்தை அனுப்பி விட்டு எழுதலாம் என்று இருந்தேன். இப்போது எழுதுவதற்கும் குதிரை வால் படத்தின் தரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  குதிரை வால் என் மதிப்பீட்டில் உலகின் ஐம்பது சிறந்த படங்களில் ஒன்று.  ஃபெலினியின் 8 ½ படத்துக்கு நிகரானது.  ஆனால் நான் ஒரு விஷயத்தைத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  அது சினிமாக்காரர்கள் எழுத்தாளர்களைத் தங்களின் பி.ஆர்.ஓ.க்களாக நடத்தி வருகிறார்கள் என்பது.  குறிப்பாக இயக்குனர்கள். ராம் ஒரு உதாரணம்.  அவருடைய படங்களுக்கு … Read more

நான்தான் ஔரங்ஸேப் – 100

சாரு நிவேதிதா நான் தான் ஔரங்கசீப் 100 வது அத்தியாயம் நிறைவு செய்திருப்பதைக் கொண்டாடும் விதமாக பாண்டி ஆரோவில்லில் வாசகர் சந்திப்பு மற்றும் கொண்டாட்டம். முன்பே இதைப்பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தாலும் , நண்பர்கள் நேரில் சந்திக்கையில் , எப்பவாச்சும் மீட் பண்ணா சொல்லுங்க, கலந்துக்கணும்னு ஆர்வமா இருக்கு என்கிறார்கள். போஸ்டுகள் பலர் பார்வைக்கும் செல்வதில்லை. மார்ச் 19 காலை முதல் இரவு வரை. வர ஆர்வம் உள்ளவர்கள் கீழே கமெண்டில் இருக்கும் லிங்கை சொடுக்கி குழுவில் … Read more

குழந்தையும் ரேஸிஸமும்: அராத்து

ஆழியை பள்ளியில் இருந்து அழைத்து வரச் சென்றிருந்தேன். நான் ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறை செல்வதால் வெளியே வந்த ஆழி தாயைத் தேடி தவித்தபடி இருந்தான். நானும் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன். அவனுக்கும் எனக்கும் 2 அடி தூரம் தான். என் கண்களும் அவன் கண்களும் நான்கைந்து முறை சந்தித்தித்துக்கொண்டன. ஆனாலும் ஐயாவுக்கு என்னைத் தெரியவில்லை. ஒருவரை ஒரு இடத்தில் எதிர்பார்க்காமல் இருந்தால் கண்டுபிடிப்பது சிரமம் தான் போல. நடந்து வந்து கொண்டிருக்கும் போது ஆழி ஒரு மேட்டர் சொன்னான்.”ஒரு மிஸ் … Read more