நிறுத்த வேண்டாம்…

வணக்கம் சாரு,உங்களின் வலைத்தளத்தில், ஒளரங்ஸேப் தொடரை நிறுத்திவிடலாமா என்று யோசித்ததாகவும்  மற்றும் சிலர் அதை திராபை என்று சொன்னார்கள் என்றும் எழுதியிருந்தீர்கள். மிகவும் வருத்தமாக இருந்தது. முன்பு ஒரு முறை உங்களிடம் , இந்த தொடர் புத்தகமாக வெளிவந்ததும் படிக்கிறேன் என்று சொன்னேன். ஆனால், 73 அத்தியாயங்கள் படித்த்து முடித்துவிட்டேன். தொடரந்து படிக்க நேரம் இல்லை இப்பொழுது.பிறகு நிச்சயமாக வாசிப்பேன்.புத்தகத்தையும் வாங்க படிப்பேன். எனக்கு வரலாறு படிப்பதில் ஆர்வம் அதிகம். இந்த தொடருக்காக நீங்கள் போடும் உழைப்பு , … Read more

நான்தான் ஔரங்ஸேப் கொண்டாட்டம். ஒரு பார்வை.

இலக்கிய கூட்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை நம் தமிழ் சூழலில் இருக்கிறது. ஒரு ஹால் இல்லையேல் ஒரு பொதுவான இடம் புக் செய்யப்படும். அங்கு புத்தகம் வாசித்த ,வாசிக்காத மனிதர்கள் வருவார்கள். ஒருவர் அங்கு மைக் பிடித்து பேசத் தொடங்குவார். அவர் பேச நாம் கேட்க நாம் கேட்க அவர் பேச என விழா இனிதே நிறைவேறும். உள்ளே செல்லும் போதே எல்லோருக்கும் மிக்ஸர் வழங்கப்படும் என நினைக்கிறேன். வாயை மட்டும் … Read more

ஔரங்ஸேப் – சில கேள்விகள்

நான் அத்தனை புத்திசாலி அல்ல.  என் மூளையில் எந்த விஷயமும் சட்டென்று பதிந்து விடாது.  மொழிகளைக் கற்றுக் கொள்வதிலும் பூஜ்யம்.  தமிழ் மட்டும் விதிவிலக்கு.  வாசிக்கும் வேகமோ ரொம்பக் கம்மி.  உங்களுக்கு ஒரு புத்தகத்தைப் படிக்க மூன்று நாள் ஆகும் என்றால் எனக்குப் பன்னிரண்டு நாள் ஆகும்.  இதனாலேயே நான் எதிலும் அதிக உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கிறது.  இதையெல்லாம் தன்னடக்கமாகச் சொல்லவில்லை.  என் உயரம் 5.5 என்பதைப் போல் சொல்கிறேன்.  6.2 ஆக இருந்திருந்தால் ஆகாயத்தில் பறப்பேன்.  … Read more

ஔரங்ஸேப் 100 விழா (2)

விழா பற்றி எழுத இன்னும் நிறைய உள்ளது. நாளை எழுதுவேன். இன்று ஔரங்ஸேப் அடுத்த அத்தியாயம் அனுப்ப வேண்டும். 19ஆம் தேதி விழா முடிந்து இரவு ஒன்பது மணி அளவில் டிஜே பாடல்களைப் போட ஆரம்பித்தார். கோவாவில் புத்தாண்டு சமயத்தில் நடக்கும் இசைக் கச்சேரிகளைப் போன்ற ஒலி, ஒளி அமைப்பு. வனம் வேறு. பத்து மணியிலிருந்து இரண்டு மணி வரை ஆடினேன் என்று நினைக்கிறேன். அதையெல்லாம் தினேஷ் குமாரை என் ஐஃபோன் மூலம் பதிவு செய்யச் சொன்னேன். … Read more