முதல் நூறு : 8

கேள்வி: காமத்திலும் காதலிலும் முத்தத்துக்கு இரு வேறுபட்ட இடங்கள். இவையிரண்டின் ந்யூட்ரலாக முத்தம் இருக்க வேண்டியதா? முத்தம் என்பதைப் பற்றிய உங்கள் கருத்தென்ன சொல்லுங்களேன். ஜெனிஃபர் பதில்: என்னைப் பொறுத்தவரை காதல் வேறு, காமம் வேறு அல்ல.  காதல் இல்லாத காமத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை.  உலக வாழ்வின் அவலங்களில் அது ஒன்று.  ஆனால் அன்பின் முத்தம்,  காதலின் முத்தம் இரண்டும் இரு துருவங்கள் ஆயிற்றே?  முத்தம் பற்றி கருத்து சொல்லக் கூடாது.  அதைச் செயல்படுத்த வேண்டும்.  … Read more

சொற்கடிகை : 20

சொற்கடிகை எனக்குப் பெருத்த ஏமாற்றம் என்றார் டார்ச்சர் கோவிந்தன்.  ஆரம்பத்தில் பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தது.  பழைய ஞாபகங்களை நினைவு கூர்தல் (reminiscence) என்று தொடங்கி இப்போது அன்றாட நாட்குறிப்பு மாதிரி ஆகி விட்டது என்று சலித்துக் கொண்டார். நான் சொன்னேன், நான் தரையிலிருந்து பார்க்கவில்லை.  தரையில் இருப்பவனுக்குத்தான் பின்னால் முன்னால் எல்லாம். நான் கலைஞன்.  மேலே பறப்பவன். எனக்கு முன்னால் பின்னால் எதுவுமே கிடையாது.  மேலே இருந்து நோக்கும்போது எல்லாமே சமம்தான்.  நேற்றும் இன்றும் ஒன்றுதான்.  மீண்டும் … Read more

ஸ்மாஷன் தாரா மீண்டும்…

நண்பர் ஒருவர் போன் செய்து ஸ்மாஷன் தாரா ஏன் இத்தனை தாமதம், புத்தக விழாவிலேயே வந்திருக்கலாமே என்றார். இப்போது வராததும் நல்லதுதான். அங்கே மிஸ் யூ சுனாமி அடித்துக் கொண்டிருப்பதால் அடுத்த மாதம் வருவதே உசிதம். சுனாமி என்பது சின்ன வார்த்தை. ஹமீதைப் பார்க்க உயிர்மை போயிருந்தேன். ஒரு குடும்பம் வந்தது. 30 வயது இளைஞர். அம்மா. மனைவி. குழந்தை. மிஸ் யூவை வாங்கி ஹமீதிடம் கையெழுத்து வாங்கினார். போட்டோ எடுத்துக் கொண்டார். எல்லாம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் … Read more