முதல் நூறு: 12: எழுத்தாளர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லையா?

12.  தமிழ்ச் சூழலில் ஏன் பெரும்பான்மையான எழுத்தாளர்களால், வாசகர்களின் பார்வையில் உள்ள நியாயமான எதிர்வினைகளை, கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை? எதிர்வினை என்றுகூட அல்ல, மிகச் சாதாரண விமர்சனத்தைக்கூட எதிர்கொள்ள மறுக்கின்றனர். (இந்த பட்டியலில் முதிர்ந்த எழுத்தாளர்களும் உண்டு). தமிழ்ச் சூழலில் எது இலக்கியம்? ஏனெனில், பல எழுத்தாளர்கள் கழக கட்சி சார்ந்து பொய் பாதி, மெய் மீதி என்று கலந்துகட்டி எழுதுகிறார்கள்.  இது எப்படி இலக்கியமாகும்? இது அடுத்த அடுத்த தலைமுறைக்கும், இலக்கியத்திற்கும் செய்யும் பாவமில்லையா?  … Read more

தேவதை கடவுள் மற்றுமொரு சாத்தான்

“நீ பழகிக் கொண்டிருப்பவன் சைத்தான் என்பதும்நான் தேவதை என்பதும்உனக்குத் தெரியாதா?” என்றாள் தேவதைதெரியுமே என்றேன்நல்லது,அப்படியானால்  நீசைத்தானை உதறிவிட்டு என்னோடு வாசொர்க்கத்தைக் காட்டுகிறேன்என்றாள் தேவதை மதகுருமாரும் தீர்க்கதரிசிகளும்சொல்லும்சொர்க்கங்கள் அலுப்பூட்டுபவைஎனக்கு சொர்க்கம் வேண்டாம்சைத்தானோடே இருந்து கொள்கிறேன்என்றேன் கடைசியாக ஒருமுறை முத்தமிட்டுப்பிரிந்தாள் தேவதை பிறகு சைத்தானும் நானுமாய்தேவதைகளின் குறுக்கீடின்றிகொண்டாடினோம்கொண்டாடினோம்கொண்டாடினோம்வாழ்க்கையை ஒருநாள்டென் டௌனிங் என்ற மதுக்கூடத்தில் வைத்துகடவுளை எப்படி ஒழித்துக் கட்டலாமெனதிட்டங்கள் தீட்டினோம்நான் பலவிதமான ஆயுதங்களைபரிந்துரை செய்தேன் ஆயுதங்களால் அது முடியாதுகடவுளைக் கொல்லும் வலுவான ஆயுதம் ஒன்று உண்டென்றுசொல்லிஅதைச் செய்தும் காட்டினான் சைத்தான் … Read more

முதல் நூறு : 11

11.  புத்தகங்கள் வாங்கிப் படிப்பவர்கள் குறைந்து வருவது குறித்து நீங்கள் அடிக்கடி எழுதுவதுண்டு. ஒருவேளை இன்றைய குழந்தைகளுக்கு நிறைய சிறார் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து பழக்கப்படுத்த முடியுமானால் அவர்கள் பெரியவர்கள் ஆகும்போது இலக்கிய வாசிப்பில் ஈடுபட வாய்ப்புகள் அதிகமாக இருக்குமோ? பிரியா பதில்: பொதுவாக உலக அளவிலேயே புத்தக வாசிப்பு குறைந்து விட்டது.  இருந்தாலும் அதையெல்லாம் தமிழ்நாட்டோடு ஒப்பிட முடியாது.  வுல்ஃப் டோட்டம் நாவலை சீனாவில் கோடிக்கணக்கில் வாங்கிப் படித்தார்கள்.  இன்றும் முராகாமி ஜப்பானில் சூப்பர் ஸ்டாராகத்தான் … Read more

ஒரு கடிதமும் பதிலும்

ஐயா,வணக்கம். உங்களின் கடிதத்தை படித்தேன். உங்கள் கடிதத்தின் படி நீங்கள் தள்ளபடி விலையில் கூட எதுவும் வாங்காமல் பதிப்பாளரையும், இந்திய நாட்டு பொருளாதாரத்தையும் வாழ வைக்கும் அக்சய பாத்திர குணமுடையோர் என்பதை அறிந்து மகிழ்கிறேன். ஆனால் நாங்கள் பிச்சை பாத்திரம் ஏந்தி தான் புத்தக காட்சிக்கு வர டிக்கட் போட்ட ஆசாமிகள் ஆகையால் தள்ளுபடி எங்களுக்கெல்லாம் வரபிரசாதமாக அமைக்கிறத மேன்மை தங்கிய தாங்கள் அடியேன் எழுதிய கடிதத்தால், பதிப்பாளர்களிடம் பேசி நாலனாவிற்கு இல்லத்திற்கு சென்று விநியோகம் செய்ய … Read more

இன்று மாலை புத்தக விழாவில்…

நேற்று நான் நாலரைக்கு வராமல் ஐந்தரைக்கே வர முடிந்தது. மன்னிக்கவும். இன்று நான்கு மணிக்கே வந்து விடுவேன். நான்கு மணிக்கு உயிர்மை அரங்கில் போய் மனுஷைப் பார்த்து விட்டு நாலரைக்கு ஸீரோ டிகிரி அரங்கு வருவேன். F45