முதல் நூறு 17: நிழல் உலக அனுபவங்கள்

17.  அன்பான சாரு, நான் அரசு வேலையில் இருக்கிறேன். பத்து நாட்களுக்கு முன்பு எந்தத் தவறும் செய்யாத என்னிடம் ஒரு மேல் அதிகாரி ஏதோ ஒரு கோபத்தினால் நான் கொண்டு போன கோப்பினை என் முகத்தில் விட்டெறிந்தார். கோபமும், அழுகையுமாக வந்தது. என்னதான் சுமரியாதை இருந்தாலும் பணிக்கு ஆபத்தோ, பணியிடை மாறுதலோ வந்துவிடக் கூடாதென்று பல்லைக் கடித்துக்கொண்டு அறையை விட்டு வந்துவிட்டேன். இதையெல்லாம் தாண்டி எப்படி பக்குவமாக, நிதானமாக, மகிழ்ச்சியாக வாழ்வது? ப்ரியா பதில்: இந்தக் காலத்திலும் … Read more

ஒரு இலக்கியத் திருட்டு

நான் இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்த கருத்துகளைத் திருடி கவிதை எழுதி விட்டார் ஒரு கவிஞர். ஸ்பானிஷ் கவிஞரான அவருக்கு தமிழ் எப்படித் தெரியும் என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. என்னுடைய அந்தக் கட்டுரை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படவில்லை. இருந்தும் எப்படி இந்த இலக்கியத் திருட்டு நடந்தது என்று தெரியவில்லை. வன்மையாகக் கண்டிக்கிறேன். இதை என் கவனத்துக்குக் கொண்டு வந்த ஸ்ரீராமுக்கு நன்றி. என்னிடமிருந்து திருடியவர் பெயர் நிகானோர் பார்ரா. கீழே கவிதை: I’m Not a … Read more

காட்டுமிராண்டிகளின் சமூகம்

வில் ஸ்மித் என்ற நடிகரின் மனைவியை ஆஸ்கர் மேடையில் ஒரு காமெடி நடிகர் bodyshame பண்ணி விட்டார்.  அதற்கு எதிர்வினையாக வில் ஸ்மித் அந்தக் காமெடி நடிகரை மேடைக்குப் போய் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.  காணொலியைப் பார்த்தேன்.  பளார் என்றுதான் அறைந்தார். இந்தச் சம்பவம் குறித்து தமிழகத்தின் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் அத்தனை பேரும் வில் ஸ்மித்தைப் பாராட்டி எழுதிக் குவிக்கிறார்கள்.  உலகெங்கிலும் ஒடுக்கப்படும் இனம் என்று பார்த்தால் பெண்களும் அதில் உண்டு.  பெண்களை விட … Read more