வள்ளலாரோடு ஒரு சம்பவம்

வள்ளலாராகவே இருந்தாலும் என்னோடு பழகும் போது கத்தியை எடுத்து விடுகிறார் என்று பலமுறை எழுதியிருக்கிறேன் அல்லவா?  அது போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது.  அவர் ஒரு இனிமையான மனிதர்.  இனிமை என்றால் அப்படி ஒரு இனிமை.  யாருக்கும் எந்தத் தீங்கும் நினையாதவர்.  மனதில் கூட.  அவர் எனக்கு நண்பரானார்.  அவர் சில மாதங்களுக்கு முன்புஎன்னிடம் ஒரு உதவி கேட்டார்.  அதை விவரிப்பதற்கு முன்பாக இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.  அவர் … Read more

ஆவணப் படம்

இன்னும் ஐந்து ஆண்டுகளில் எனக்கு புக்கர் விருது கிடைக்கலாம்.  அதுவரை விடை பெறாமல் இருந்தால்.  கிடைக்காமலும் போகலாம்.  முன்னேயே சொன்னாயே என்று என்னைப் பிடிக்கக் கூடாது.  இங்கே நான் சொல்லப் போகும் விஷயத்துக்கு புக்கர் முக்கியமல்ல.  அது ஒரு உதாரணம்.  ஒரு தோது.  புக்கரோ கிக்கரோ கிடைத்தால் எனக்குப் பாராட்டு விழா நடத்துவார்கள்தானே?  அப்போது சிலர் மேடைக்கு வந்து பொன்னாடை போர்த்தி கௌரவிப்பார்கள்.  கௌரவிக்கட்டும்.  எனக்கு ஆட்சேபணை இல்லை.  ஆனால் முதல் வரிசையில் வினித் அமர்ந்திருப்பான்.  அவனிடம் … Read more

இசை நிலவு வைன்

இன்றைய நிலவு முழுமையாகக் காண்கிறது கண்டு வெகு காலம் ஆயிற்று வைன் அருந்தினான் இசை கேட்டான் வைன் அருந்தினான் இசை கேட்டான் வைன் அருந்தினான் இசை கேட்டான் இசை வைன் நிலவு இசை நிலவு வைன் நிலவு வைன் இசை நிலவு வைன் இசை நிலவு வைன் இசை நிலவு வைன் இசை நிலவு வைன் இரவு கழிந்தது காலை புலர்ந்தது நிலவைக் காணோம் அவனையும் காணோம்

ரகசியம்

இதுவரை யாரிடமும் சொல்லாதஒரு ரகசியம் சொல்கிறேன் கேள் என்றேன் வேண்டாம் என்றாள் அதன் பிறகு அவளுக்கான கதவை மூடி விட்டேன் போயும் போயும் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாதவளிடம் சொற்களைப் பகிர்ந்து என்ன பயன்?

Slaughterhouse-Five நாவலை முன்வைத்து பின்நவீனத்துவச் சொல்லாடலும் கதைகூறலும்

Slaughterhouse-Five நாவலை முன்வைத்து பின்நவீனத்துவச் சொல்லாடலும் கதைகூறலும்: சாரு உரை. நன்றி ஸ்ருதி டிவி