the grey man

தனுஷுக்காக க்ரே மேன் பார்த்தேன்.  ஒரு ஹாலிவுட் குப்பை.  விக்ரம் மாதிரி.  ஆனால் எனக்கு இப்படிப்பட்ட குப்பைகள்தான் பார்க்கப் பிடிக்கிறது.  காரணம், என் ரத்த அழுத்தம்.  எதையும் சிந்திக்காமல் – சொல் அற்று சும்மா இருந்தால் ரத்த அழுத்தம் 120 – 80யில் நிற்கிறது.  அதாவது, காலையில் எழுந்ததும் சோதித்தால் வரும் அளவு 120 – 80.  பல் துலக்கி, தியானம் செய்து விட்டுப் பார்த்தால் 110- 70.  பகல் முழுவதும் சிந்தித்து, படித்து, எழுதி விட்டுப் … Read more

the outsider (9)

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய கதை.  என் மகன் கார்த்திக் மரீன் எஞ்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தான்.  கட்டணம் கட்ட காசு இல்லை.  வங்கிக் கடனும் கிடைக்கவில்லை. படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.  நான் வேலையை விட்டு விட்டேன்.  வேலையை விட்டால் பட்டினி கிடந்தாவது பிழைத்துக் கொள்ளலாம்.  அதிகாரியை அடித்து விட்டால் ஜெயிலுக்குத்தான் போக வேண்டும்.  அதிகாரியை அடிப்பது தவிர வேறு வழியே இல்லை.  நைனான் என்ற அந்த அதிகாரி என்னை இடியட் என்று திட்டினான்.  ஃபோனை எடுத்துத் … Read more

நான்தான் ஔரங்ஸேப்… சிறப்புப் பிரதிகள்

சங்க இலக்கியத்தையும் காளிதாஸனையும் படித்துக் கொண்டிருக்கிறேன்.  தியாகராஜாவுக்குள் நுழைவதற்கு முன்பாக மேற்கண்ட இரண்டையும் முடித்து விடலாம் என்று யோசனை.  ஓரளவு பாதி முடித்து விட்டேன்.  சங்க இலக்கியம் பற்றி எழுத ஏராளமாக உள்ளது.  எழுத ஆரம்பித்தால் நாவலை ஆரம்பிக்க முடியாது என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு படித்துக் கொண்டே இருக்கிறேன்.  ஆனால் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.  சங்கப் புலவர்கள் பாவம், பெரும்பாலும் மன்னர்களிடம் போய் யாசகம் கேட்கும் நிலையில்தான் இருந்திருக்கிறார்கள்.  ஆதியிலிருந்தே … Read more

முகமூடிகளின் பள்ளத்தாக்கு

I finished reading ‘mugamoodigalin  Pallathakku’ Truth be told, a tantalizing reading experience. A soul-stirring  fiction. Tarun has diagonised the crux of humanity that is not so easily detected and is roaming freely in the society. This beautifully written text is against sanctitude, the origin of despotism. And it is a fervent revolution against the term … Read more

குரு பூர்ணிமா

ஒருமுறை மஹா பெரியவரிடம் ஒரு பக்தர் கேட்டார், என்னுடைய குருவிடம் பல தீய பழக்கங்கள் இருக்கின்றன. அதனால் குருவை மாற்றி விடவா? வீட்டைத் தூய்மை செய்யும் துடைப்பம் அழுக்காகத்தான் இருக்கும். வீடு சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனி. குருவை மாற்றினால் உனக்குப் பரிசுத்தமான குரு எப்போதுமே கிடைக்க மாட்டார். என் எழுத்துதான் உங்களுக்கு நான் அளிக்கும் ஞானம். நான் அளிக்கும் பரிசு. என் எழுத்து ஒரு பொக்கிஷம். அதிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக் கொள்ளுங்கள். மற்றபடி நான் … Read more