the outsider (13)

உலகின் கலாச்சார கேந்திரம் சீலே என்றால் சீலேயின் கலாச்சார கேந்திரம் கான்ஸெப்ஸியோன் என்று சொல்லலாம்.  சீலேயின் கல்லூரி நகரம் என்று அழைக்கப்படும் கான்ஸெப்ஸியோனில்தான் அதிக அளவில் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் இருக்கின்றன.  அங்கேதான் சீலேயிலேயே தீவிரமான கலை இலக்கியச் செயல்பாடுகளும் அதிக அளவிலான நாடக அரங்குகளும் இருக்கின்றன.  அதன் காரணமாகவே சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களிலும் கான்ஸெப்ஸியோன் முன்னணியில் இருந்தது.  அதனால் கான்ஸெப்ஸியோனை போராட்டங்களின் கேந்திரம் என்றே அழைத்தனர்.  1932இலிருந்து 1973இல் பினோசெத்தின் ராணுவ ஆட்சி தொடங்கும் வரை … Read more

எழுத்தைத் தவிர வேறேதும் செய்வதற்கில்லை…

நான் ஒரு துறவியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் யாரும் நம்புவதில்லை.  ஆனால் நான் நம்புகிறேன்.  அது மட்டும்தான் எனக்கு முக்கியம்.  நீங்களும் நம்புகிறாற்போல் ஒரு கதையை டிசம்பர் 18 அன்று உங்களுக்கு நான் சொல்லுகிறேன்.  2500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கதை.  இப்போதே சொன்னால் சுவாரசியம் போய் விடும். அதனால் எனக்கு தீபாவளி என்பதெல்லாம் எவ்விதத்திலும் அர்த்தமாவதில்லை.  நான் எப்போதுமே தீபாவளி கொண்டாடியதில்லை.  எப்போதுமே எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடியதில்லை.  உணவின் மீது … Read more

the outsider (12)

அக்டோபர் 10ஆம் தேதி த அவ்ட்ஸைடர் 11 வந்துள்ளது.  தொடர்ச்சி வேண்டுவோர் அதைப் படித்து விட்டு இங்கே வரலாம்.  (ஸ்பானிஷை தென்னமெரிக்காவின் ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு மாதிரி உச்சரிக்கிறார்கள், பேசுகிறார்கள்.  சீலேயிலேயே தெற்கு சீலேயர்கள் பேசுவது ஸ்பானிஷே இல்லை என்று வட சீலேயர்கள் கிண்டலடிக்கிறார்கள்.  மெக்ஸிகோவின் ஸ்பானிஷ் எதையோ மென்று மென்று துப்புவது போல் உள்ளது.  மெக்ஸிகோ என்று சொல்லாதே, மெஹீகோ என்று சொல் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.  ஸ்பானிஷின் தாய் தேசமான ஸ்பெயினில் பேசப்படும் ஸ்பானிஷ் தென்னமெரிக்க … Read more

கடல் கன்னி

கடல் கன்னி ரொஹேலியோ சினான் (Rogelio Sinan) தமிழில் சாரு நிவேதிதா (ஊரின் மிக அழகான பெண்) தொகுப்பில் இருந்து “இதோ பாருங்கள் டாக்டர் பால் எக்கர், இந்த வழக்கில் உங்கள் மீது நாங்கள் காட்டியிருக்கும் பொறுமைக்கு நீங்கள் இப்போது சாதிக்கும் மௌனம் எந்த விதத்திலும் நியாயமாக இல்லை. நீதிக்குத் தேவை அழுத்தமான ஆதாரங்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் ஏன் இப்படி மௌனம் சாதிக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.” பால் எக்கர் … Read more

உத்தம வில்லன்: உலகின் முதல் ஆட்டோஃபிக்‌ஷன் சினிமா

மீள் பிரசுரம் தினமணி இணையதளம் மே 6, 2015 உத்தம வில்லன் படத்தைப் பார்க்க  ஒரு எதிர்மறையான மனநிலையுடனேயே  சென்றேன்.  காரணம் – குணா, மகாநதி, ஆளவந்தான் போன்ற நான் விரும்பி  ரசித்த கமல் படங்கள் வந்து ரொம்ப காலம் ஆகி விட்டது.  ஜனரஞ்சகமாக இருந்தாலும் மைக்கேல் மதன காமராஜன், சதி லீலாவதி போன்ற படங்களும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.  அப்படி வந்தும் நாளாகி விட்டது.  அதனால் ஏற்பட்டதுதான்  அந்த எதிர்மறையான  மனநிலை.  ஆனால் கமல் படங்கள் … Read more

ஹிந்தி

ஹிந்தியை ஒரே மாதத்தில் கற்றுக் கொண்டு விடலாம். அந்த மொழி இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் பேசப்படுகிறது என்பதைத் தவிர அந்த மொழிக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் இல்லை. ராஜாஜியிடம் நேரு கேட்டார், ஏன் நீங்கள் ஆங்கிலத்தை ஏற்கிறீர்கள், இந்தியை எதிர்க்கிறீர்கள் என்று. ராஜாஜியின் பதில், ஆங்கிலேயர் எம்மை வென்றார்கள், நீங்கள் வெல்லவில்லை. இந்தி மொழித் திணிப்பு என்பது வட இந்தியரின் இனவாதம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. பெரும்பான்மையான வட இந்தியர் இனவெறியர் என்பது … Read more