ஆட்டோநேரட்டிவ் பதிப்பக நூல்கள்

ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத்தின் நூல்கள் அடக்கவிலையில் விற்கப்படுகின்றன. உதாரணமாக கரிச்சான் குஞ்சு மொழிபெயர்த்த இந்தியத் தத்துவ இயலில் அழிந்தனவும் நிலைத்திருப்பனவும் என்ற மிகப் பெரிய நூல் 1200 ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 350 ரூபாய்க்குக் கிடைக்கிறது. வாங்கிப் பயனடையுங்கள்

மொத்தம் 45000 வார்த்தைகள்

ஒரு பத்தாயிரம் வார்த்தைகள் உள்ள நீண்ட சிறுகதை என்றுதான் ஆரம்பித்தேன். இருபத்தைந்தாயிரம் வார்த்தைகள் வந்தன. பிறகு நாற்பதாயிரம் வார்த்தைகள். சீனிக்கும் கார்ல் மார்க்ஸுக்கும் இன்னும் ஒன்றிரண்டு நண்பர்களுக்கு அனுப்பி விட்டு இனிமேல் ஒரு வார்த்தை சேர்க்க மாட்டேன் என்று உறுதி கூறி விட்டேன். ஆனால் நேற்று இரவு நித்திரையில் மேலும் ஒரு அத்தியாயம் கனவாகத் தோன்றியது. வாக்கியம் வாக்கியமாக கனவில் எழுதப்பட்டது. நான்கு மணிக்கு எழுந்து அவற்றைப் பதிவு செய்தேன். அதையும் இறுதி அத்தியாயமாகக் கோர்த்து பதிப்பகத்துக்கு … Read more

தன் சதையை வாட்டி உண்ணக் கொடுத்தவன்: வளன் அரசு

சாருவின் அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு என்ற புதிய நாவலைப் படித்ததிலிருந்து ஒருவிதமான ட்ரான்ஸ் மனநிலையில் இருக்கிறேன். இவ்வளவு பெரிய நாவலை இவ்வளவு சீக்கிரமாகவும் தீவிரமாகவும் வாசித்ததேயில்லை. நாவலின் pdf அனுப்பிய அன்றே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். முப்பது பக்கம் முடித்தவுடன் மனமில்லாமல் மூடிவைத்துவிட்டு மற்ற வேலைகளில் மூழ்கினேன். இன்று காலை மீண்டும் வாசிக்க ஆரம்பித்து மதியத்துக்குள் முழுவதும் முடித்துவிட்டேன். நடுவில் உணவில்லை தண்ணீரில்லை. மதியம் பன்னிரண்டு மணிக்கு முக்கியமான வேலை, வாசிக்கும் ஆர்வத்தில் சுத்தமாக … Read more

மூன்று அறிவிப்புகள்

இன்று மட்டும் புத்தக விழாவுக்கு வர மாட்டேன். நாளையிலிருந்து மாலை ஐந்து மணியிலிருந்து எட்டரை வரை ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். எஃப் 19. இன்று வராததற்குக் காரணம், அருஞ்சொல். அருஞ்சொல்லுக்கான அடுத்த கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். அருஞ்சொல் நேர்காணலை இதுவரை என் எழுத்தைப் படிக்காதவர்கள் பலரும் படிக்கிறார்கள் என்று தெரிகிறது. அருஞ்சொல்லின் வீச்சு பற்றி ஆச்சரியமடைந்தேன். இதுவரை கேட்கப்படாத கேள்விகள். இதுவரை சொல்லாத பதில்கள். (ஒரே ஒரு விதிவிலக்கு: இக்கேள்விகளில் பல த அவ்ட்ஸைடர் … Read more

புத்தக விழா

இன்றிலிருந்து தினமும் மாலை ஐந்து மணியிலிருந்து எட்டரை வரை புத்தக விழாவில் ஸீரோ டிகிரி அரங்கில் (எஃப் 19) இருப்பேன். சனி, ஞாயிறு, மற்றும் விடுமுறை தினங்களில் நான்கு மணியிலிருந்து எட்டரை வரை இருப்பேன். நண்பர்கள் சந்திக்கலாம். ஒரு சின்ன வேண்டுகோள். நான் உங்கள் நூல்களில் கையெழுத்துப் போடும் போது நீங்கள் குனிந்து நிற்க வேண்டாம். அது ஏதோ மாதிரி என்னைத் தொந்தரவு செய்கிறது. பக்கத்து நாற்காலிகளில் அமருங்கள். அல்லது, நிமிர்ந்தே நில்லுங்கள். நான் கையெழுத்துப் போடுவதை … Read more

நண்பர்கள் கவனத்துக்கு…

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு நாவலை முடித்து விட்டேன். இனிமேல் அதில் செய்வதற்கு எதுவும் இல்லை. 35000 வார்த்தைகள். 350 பக்கங்கள் இருக்கலாம். எனக்கு அந்தக் கணக்கு தெரியாது. பணம் அனுப்பியவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பவும். உடன் பிடிஎஃப் அனுப்பி வைக்கிறேன். மேலும், பிடிஎஃப் பிரதி தேவைப்படுபவர்கள் பணம் அனுப்பவும். விவரம் நேற்றைய பதிவில் உள்ளது.