சொல் பேச்சு

ரொம்ப காலமாக என் அறையில் மின்விசிறி வேலை செய்யவில்லை. ஏசி இருந்ததால் மின்விசிறியின் தேவையில்லாமல் இருந்தது. அதற்காக காலையிலிருந்தேவா ஏசியைப் போட்டுக் கொண்டிருக்க முடியும்? ஒருவழியாக நேற்று புதிய மின்விசிறி மாட்டப்பட்டது. அப்போது எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேனேஜர் மின்விசிறி மாட்டுவதை மேற்பார்வை இடுவதற்காக வந்தவர், அறையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து விட்டு பிரமிப்புடன் “இத்தனை புத்தகங்களையுமா சார் படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். தேவையானதை எடுத்துப் படிப்பேன் என்றேன். அவருக்கு என் பதில் புரியவில்லை. ”நான் இதுவரை ஒரு … Read more

பெங்களூருவில் ஆற்றிய உரை

ஆகஸ்ட் 15 அன்று பெங்களூருவில் புக் ப்ரம்மா அமைப்பின் ஆண்டு விழாவில் நான் ஆற்றிய உரையை கபிலனின் ஷ்ருதி டிவி காணொலியாகத் தருகிறது. நிகழ்ச்சிக்கு என் தமிழ் வாசகர்கள் பலர் பல ஊர்களிலிருந்து வந்திருந்தது மகிழ்ச்சியை அளித்தது. வந்திருந்த கன்னட எழுத்தாளர்களில் சிலர் என் ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்திருந்தார்கள். ஒரு கன்னடப் பெண் எழுத்தாளர் அக்கம்மா தேவியைப் பற்றி 700 பக்க நாவல் எழுதியிருக்கிறார். அவர் ஒரு களச் செயலாளியும் ஆவார். பெயர் மறந்து போனேன். … Read more

தி இந்துவில் வெளிவந்த என் கட்டுரை பற்றிய கடிதம்

தி இந்துவில் உலகமயமாக்கல் 25 தொடரில் நேற்று வந்திருந்த சாரு நிவேதிதாவின் கட்டுரை: ஒரு எழுத்துக் கலைஞனின் கூரிய பார்வைகளைக் கொண்டிருக்கிறது. அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. சிலிக்கன் புகைமூட்டத்தோடும், பாலித்தீன் புழுக்கத்தோடும், ஓயாத சங்கொலி அழைப்புகளோடும் நகரும் சிதறுண்ட வாழ்வின் ஓட்டமிகு தசைகளில் ஒன்றைப் பிளக்க வேண்டும். அப்படியாக இன்று எவரும் ஒரு சிறந்த படைப்புக்கு முயல முடியும். மாற்றம் ஏற்றமென்றல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் நமக்கு ஏமாற்றம்தான். இனி எழுத்தில் நாசூக்கு பார்க்க வேண்டியதில்லை. … Read more

ஆகஸ்ட் 15 பெங்களூர் விழா

பெங்களூருவில் Book Brahma என்ற கன்னட இலக்கிய அமைப்பு உள்ளது. www.bookbrahma.com இந்த அமைப்பினர் சென்ற ஆண்டிலிருந்து கன்னடத்தில் சிறந்த நாவலையும் சிறந்த சிறுகதைகளையும் போட்டி மூலம் தேர்ந்தெடுத்து பரிசு அளிக்கிறார்கள். நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய். முதல் பரிசு மட்டும் அல்ல. மற்றும் பல பரிசுகள். சென்ற ஆண்டு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர் தாமோதர் மாஸோ. பாரதீய ஞானபீடப் பரிசு பெற்ற கொங்கணி எழுத்தாளர். இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர் அடியேன். (என்னை அவர்களுக்கு … Read more

ஆர்த்தோ: சில எதிர்வினைகள்

வணக்கம் சாரு.          எனக்கு நாடகத் துறையைப் பற்றி ஏதும் பெரிய அளவில் தெரியாது, ஆனால் ஒரு வாசகன் என்ற நிலையிலிருந்து ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். நாடகம் எப்பொழுதும் நம்மிடையே மிகவும் நேரடியாக உரையாடுகிறது . நான் பெரிய அளவில் நாடகங்களை வாசித்ததும் இல்லை. ஆனால் உங்களுடைய நாடகத்தை படித்தவுடன் என் மனதில் எழுந்த கேள்வி, எப்பொழுதும் அந்த கேள்வியே என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது,நாம் சரியாகத்தான் வாழ்ந்து கொண்டு … Read more

ஆர்த்தோவின் உடல் மொழி: கலாமோகன்

அன்புடன் சாருவிற்கு, நீங்கள் அனுப்பி வைத்த  ஆர்த்தோ மீதான நாடகத்தை வாசித்து மீண்டும் ஓர் சிந்தனை உலகில் வீழ்ந்தேன். உங்களது எழுத்தில் ஆர்த்தோ தனது விதத்தில் ஓர் தியானம் செய்கின்றார் எனவும் சொல்லலாம். பல சிந்தனைகளிற்கான வீதிகளைத் தயாரிக்கும் கச்சிதமானது உங்கள்   படைப்பு. உங்களது எழுத்து மிகவும் கவித்துவமானது. சில வேளைகளில் நான் இதனை ஓர் கவித்துவச் சிருஷ்டிப்பு என்றே கருதுகின்றேன். எது எப்படியோ நாடக இலக்கியம் ஓர் கவித்துவ உயிர்ப்பே. ஆர்த்தோவின் முகத்தை நீங்கள் … Read more