ஒரு தகவல் பிழை

பால் ஷ்ரேடர் ரேஜிங் புல், லாஸ்ட் டெம்டேஷன், டாக்ஸி டிரைவர் ஆகிய படங்களின் இயக்குனர் அல்ல. திரைக்கதை மட்டுமே எழுதியிருக்கிறார். கட்டுரை வெளிவந்த உடனேயே இதைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிய அப்துல், சக்திவேல் (சென்னை) ஆகிய நண்பர்களுக்கு என் நன்றி.

ஜப்பான் : கனவும் மாயமும் – 1

In fact, the whole of Japan is a pure invention.  There is no such country, there are no such people.  ஆஸ்கார் ஒயில்ட் 1889இல் எழுதினார்.  ஆனால் அதற்கு அடுத்த வாக்கியத்திலேயே ஜப்பானியர்கள் ஒன்றும் அதிசய மனிதர்கள் அல்ல என்றும் சொல்கிறார்.  ஆனால் நான் அவருடைய முதல் வாக்கியத்தைத்தான் எடுத்துக் கொள்வேன்.  ஆம், ஜப்பானும் ஜப்பானியரும் மேற்கத்தியருக்கு நம்பவே முடியாத ஒரு அதிசயமாகத்தான் இருந்தார்கள், இருந்து வருகிறார்கள்.  உலகில் யார் … Read more

பெட்டியோ… : நேசமித்திரன்

பெட்டியோ… நாவலை நேசமித்திரனுக்கும் அனுப்பியிருந்தேன். ஒரே நாளில் படித்து விட்டார். நாவலின் வடிவத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தைச் சொன்னார். அதே மாற்றத்தை பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அராத்துவும் சொல்லியிருந்ததால் இப்போது அந்த மாற்றத்தைச் செய்து முடித்து விட்டேன். இப்போதைய வடிவத்தில் நாவல் இன்னும் காத்திரமானதொரு பின்நவீனத்துவப் பிரதியாக மிளிரும். பாவம் ஸ்ரீராம்தான், இதோடு நாவலை ஐந்தாறு முறை படித்து விட்டார். ஒவ்வொரு மாற்றம் செய்யும் போதும் இதுவே கடைசி என்று தோன்றும். இந்த நாவலைப் போல் வேறு … Read more

சொர்க்கம் என்றால் என்ன?

சொர்க்கம் என்றால் என்ன?  இனிமை என்றால் என்ன?  மகிழ்ச்சி என்றால் என்ன? உன்னதம் என்றால் என்ன?  அற்புதம் என்றால் என்ன?  அதிசயம் என்றால் என்ன?    இன்று என் சிநேகிதியுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது நான் எப்போதுமே சொல்லும் வசனத்தை ஒரு தொள்ளாயிரமாவது தடவையாகச் சொன்னேன்.  இந்த உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் நான்தான்.  என்னை விட மகிழ்ச்சியாக இருப்பவர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் துறவிகள், ஞானிகள், ரிஷிகள்.  நான் பேசுவது இப்படி ஒரு அமைப்பில் வாழ்ந்து கொண்டு … Read more

பெட்டியோ பற்றி அராத்து

சாருவின் பெட்டியோ நாவலை படித்து முடித்தேன். பெரும்பாலானவர்கள் சாரு சர்ச்சைக்குரிய எழுத்தாளர் என்று திருவாய் மலருவார்கள். கடைசியில் பார்த்தால் அதில் ஒரு சர்ச்சையும் இருக்காது. இந்த நாவலில் நான்கைந்து வெடி குNடுகள் இருக்கின்றன. இலக்கிய உலகமே கலவர பூமியாக மாறக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. எத்தனை தலைகள் விர்ச்சுவலாக உருளப்போகின்றனவோ? NFT என்பதால் இதெல்லாம் நடக்காமல் போகக்கூட சாத்தியம் உள்ளது. 100 பிரதிகள் மட்டுமே. யாரேனும் வாங்கியவர்கள் கொஞ்சம் கொஞ்சம் வெளியே விட்டால் கூட போச்சி….பற்றிக்கொள்ளும்.

பெட்டியோ

தி.ஜானகிராமன் எழுதிய உதய சூரியன் என்ற பயணக் கட்டுரை நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். Pleasure of the Text என்றால் இதுதான். ஆள் பிரமாதப்படுத்தியிருக்கிறார். விரிவாக பிறகு எழுதுகிறேன். பெட்டியோவை அனுப்பிய நண்பர்களிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. சீனி பயங்கர பிஸி. அலுவலக வேலை. பொதுவாக அனுப்பிய இரண்டே நாளில் வாசித்து விடுவார். ஆனால் இப்போது கடுமையான வேலை நெருக்கடி போல. நேற்று இரவு ஒரு பப்புக்குப் போய் படிக்கப் போவதாகச் சொன்னார். அந்தக் குறிப்பிட்ட பப் … Read more