2. குருவுக்கு வணக்கம்!

மாதா பிதா குரு தெய்வம் என்பது மூத்தோர் வாக்கு.  ஒரு குழந்தையை மனிதனாக மாற்றுவது மாதா பிதாவின் கடமை.  அதனால் அவர்கள் முன்னால் நிற்கிறார்கள்.  அடுத்தது குரு.  அதுவும் தெய்வத்துக்கு முன்னதாக.  அப்படியானால் குரு தெய்வத்தை விட முக்கியமானவரா?  அல்ல.  மாதா பிதாவினால் மனிதனாக உருவாக்கப்பட்ட ஒரு வியக்திக்கு தெய்வத்தை அடையாளம் காண்பிப்பவர் குரு.  தெய்வத்தை நோக்கி அந்த மனிதனை இட்டுச் செல்லும் பாதையையும் வழிமுறைகளையும் கற்பிப்பவர் குரு. இங்கே தெய்வம் என்பதை நீங்கள் பின்நவீனத்துவ காலகட்டத்தின் … Read more

ஒரு அறிவிப்பு

நம்முடைய சாருஆன்லைன் தளத்துக்கு மாதாந்திர சந்தா அல்லது குறைந்த பட்ச நன்கொடை 300 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறேன்.  ஒரு மாதத்தில் சுமார் இருபது கட்டுரைகள் எழுதுகிறேன்.  ஒரு கட்டுரைக்கான கட்டணம் 15 ரூ. இருபது கட்டுரைகளுக்கு 300 ரூ. என்பது கிட்டத்தட்ட இலவசம் மாதிரிதான்.  ஆனால் 300 பேராவது அனுப்பினால் அது ஒரு மதிப்புக்குரிய தொகையாக மாறும்.  300 ரூ என்பது ஒரு குறைந்த பட்ச நன்கொடை.  இதை உங்கள் வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப அதிகரிக்கலாம்.  எனக்குக் கிடைக்கும் பணம் அவ்வளவையும் உங்களுக்கே ஞானமாகத் திருப்பியளிக்கிறேன்.  … Read more

ஒரு சிறிய திட்டத்தில் ஒரு மிகச் சிறிய மாற்றம்

பல நண்பர்கள் தினம் பத்து ரூபாய் அனுப்புவதற்குப் பதிலாக மாதம் 300 ரூ. குறைந்த பட்ச நன்கொடை என்று வைத்தால் அனுப்புவதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் என்று கருதுகிறார்கள். அதனால் தினமும் பத்து ரூபாய் அனுப்ப வேண்டாம். மாதம் 300 ரூ. என்று வைத்துக் கொள்வோம். இது ஒரு குறைந்த பட்ச நன்கொடைதான். அதிகப்படுத்திக்கொள்வது உங்கள் விருப்பமும் உங்களுடைய சாத்தியத்தையும் பொருத்தது. ஜீபே செய்வதற்கான எண்: 92457 35566 ஜீபே எண்ணில் உள்ள பெயர்: ராஜா வங்கி … Read more

ஒரு சிறிய திட்டம்

பொதுவாக லௌகீக விஷயங்களில் நான் சீனியிடம்தான் யோசனை கேட்பேன். தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் அதன்படி செய்வேன். காரியம் வெற்றிகரமாக நடக்கும். சில அரிய சந்தர்ப்பங்களில் அவர் யோசனையைக் கேட்பதில்லை. அப்போதும் காரியம் வெற்றிகரமாக நடக்கும். ஒருவேளை அந்த விஷயத்தில் அவர் யோசனையைக் கேட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எனக்குக் குறுகுறுப்பாக இருக்கும். லௌகீக விஷயங்களில் மற்றபடி நான் யார் யோசனையையும் பேச்சையும் கேட்பதில்லை. இன்னொரு நண்பர் இருக்கிறார். ஒரு விஷயத்தில் நான் ஒரு முடிவு செய்திருப்பேன். அந்த … Read more

கெளஹர் ஜான்

1902 நவம்பர் 14-ஆம் தேதி.  கல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் இரண்டு அடுத்தடுத்த அறைகளில் ஒரு ரெடிமேட் ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைக்கப்பட்டது.  இந்தியாவின் முதல் ரெக்கார்டிங் அன்றுதான் நடக்கப் போகிறது.  அதுவரை எந்தப் பாடலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டதில்லை.  சினிமாப் பாட்டு அல்ல.  அந்தக் காலத்து சாஸ்த்ரீய சங்கீதம்.   தென்னிந்தியாவின் கர்னாடக சங்கீதம் மாதிரி வடக்கில் ஹிந்துஸ்தானி. அதில் அப்போது உலகப் புகழ் பெற்று விளங்கியவர் கௌஹர் ஜான்.  இந்தியாவில் வேலை செய்த வில்லியம் என்ற ஆர்மீனிய … Read more

மதிப்பீடுகளின் வீழ்ச்சி: கமல்ஹாசனுடன் ஒரு பேட்டி

கமல்ஹாசனும் ஜெயமோகனும் ஹிந்து பத்திரிகைக்காக உரையாடிய ஒளிப்பதிவைப் பார்த்தேன்.  In conversation with actor Kamal Haasan and writer Jeyamohan என்பதுதான் அந்த உரையாடலின் தலைப்பு.  முதலில் இந்தத் தலைப்பே அருவருப்பானது, எழுத்தாளனை அசிங்கப்படுத்துவது.  ஏன்? நடிகர்கள் என்ன இருந்தாலும் கேளிக்கையாளர்கள்தான் (entertainers).  ஆனால் எழுத்தாளர்கள் அப்படி அல்ல.  நிரூபணங்கள் நிறைய உண்டு.  தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.டி. பாகவதர்.  அவர் எப்படி வாழ்ந்தார் என்பது வரலாறு.  தங்கத் தட்டில் சாப்பிட்டவர்.  அவர் … Read more