வருவார் போவார்

யாராலோ
எதனாலோ
அனுப்பப்பட்டது போல்
வந்தார்கள்
கொடுத்தார்கள்
எடுத்தார்கள்
சொல்லாமல்
சென்றார்கள்

என் வாழ்வில்
வந்து சென்ற
பிராணிகளைப் போல