பெட்டியோ இரண்டாவது பிரதி ஒரு லட்சத்துப் பத்தாயிரத்துக்கு விற்பனை!

தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு சாதனைதான். பெட்டியோ நாவலின் இரண்டாவது பிரதி ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. வாங்கியவர் பெயர் தரவில்லை. நியாயம்தான். குடும்பத்தில் குழப்பம் ஆகி விடக் கூடாது. மிக நிச்சயமாக அவர் வாங்கிய இந்தப் பிரதி இன்னும் மூன்று ஆண்டுகளில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகும். பத்தாயிரத்துக்கு வாங்கப்படும் பிரதிகள் இன்னும் ஒரு வருடத்திலேயே ஒரு லட்சம் ரூபாயை எட்டும். எனவே இப்போது நீங்கள் பெட்டியோவை வாங்குவதற்காக செலவிடும் … Read more

நதீகா பண்டாரவின் நாடக அரங்கேற்றம்

வருகின்ற பதினேழாம் தேதி (17.11.2023) கொழும்பில் உள்ள BMICH (Bandaranaike Memorial International Conference Hall) Mihilaka Medura Outer Canopy அரங்கில் சிங்கள நாடகக் கலைஞர் நதீகா பண்டாரவின் ‘Ha- Ha Ha- Ullasa Vishada’ என்ற நாடகம் முதல் முதலாக அரங்கேற்றம் காண இருக்கிறது. நதீகா பண்டார சிங்கள நாடக உலகின் அந்தோனின் ஆர்த்தோவாகக் கருதப்படுபவர். அவர் இயக்கிய Dancing with Red Shoes என்ற திரைப்படம் சிங்கள அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே … Read more

பெட்டியோ முதல் விற்பனை

பெட்டியோ நாவலின் இருபத்திரண்டாவது பிரதியும் எழுபதாவது பிரதியும் விற்று விட்டன. ஒவ்வொன்றும் பத்தாயிரம் ரூபாய். இப்போது என்.எஃப்.டி.யில் விற்பனைக்கு வைத்திருக்கும் பத்தாயிரம் ரூபாய் பிரதிகளின் எண்கள்: 29 மற்றும் 18. இதை முன்பதிவு செய்த நண்பர்கள் உடனடியாக வாங்கி விடும்படி கேட்டுக் கொள்கிறேன். மற்ற பிரதிகள் தேவையென்றால் எனக்கு உடனடியாக எழுதுங்கள். விற்பனைக்கு வைக்கிறேன். ஒவ்வொரு பிரதியையும் விற்பனைக்கு வைக்கும்போது நான் என்.எஃப்.டி.யில் பணம் செலுத்த வேண்டும். இது தவிர முதல் பிரதி (இரண்டு லட்சம் ரூபாய்), … Read more

பெட்டியோ – இரண்டாவது பிரதி

பெட்டியோ இரண்டாவது பிரதி விற்பனைக்கு வந்துள்ளது. விலை என்.எஃப்.டி.யில் தற்போதைய விலை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய். இது பற்றி என்.எஃப்.டி.யில் கருத்து சொல்லியிருக்கும் கண்ணாயிரங்கள் என்னுடைய பேராசை பற்றி எழுதியிருக்கிறார்கள். நாற்பது ஆண்டுகளாக ஓசியில் எழுதிக் கொண்டிருந்தவன் நான். பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து சீலே போய் வந்து நாலு கட்டுரை எழுதினேன். தி இந்துவில். ஒரு கட்டுரைக்கு ஆயிரம் ரூபாய் என்று நாலாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இது ஓசி என்றுதானே கணக்கு? அதை … Read more

பெட்டியோ… என்.எஃப்.டி.யில்

பெட்டியோ நாவலின் சில பிரதிகளை அந்நாவலை வடிவமைத்த ஸ்ரீபத் எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அச்சுப் பிரதிக்கும் இதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. அச்சுப் பிரதியில் ஒரே ஒரு பிரதியைத் தயார் பண்ணி விட்டு அச்சுக்குக் கொடுத்தால் எத்தனை ஆயிரம் பிரதி வேண்டுமானாலும் அச்சடித்துக் கொள்ளலாம். என்.எஃப்.டி. பிரதிகள் அப்படி இல்லை. ஒன்று ஒன்றாக செதுக்க வேண்டும். இப்போது விலை விவரம்: முதல் பிரதி – இரண்டு லட்சம் ரூபாய். இரண்டாவது பிரதியிலிருந்து பத்தாவது பிரதி வரை … Read more

பெட்டியோ முதல் பிரதியும் நூறாவது பிரதியும் விற்பனையில்…

பெட்டியோ நூறாவது பிரதி ஏற்கனவே என்.எஃப்.டி.யில் விற்பனையில் இருக்கிறது. ஒரு வாரத்துக்கு முன் ஐந்து லட்சமாக இருந்தது இன்று 7159 டாலருக்கு விலை உயர்ந்து விட்டது. இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாய். ஒரு வாரத்தில் ஒரு லட்சம் ரூபாய் அதிகரித்திருக்கிறது. டாலர் மதிப்புக்கு ஏற்பவும், சந்தை மதிப்புக்கு ஏற்பவும் இந்த விலை கூடும், குறையும். இன்று பெட்டியோவின் முதல் பிரதி வெளிவந்து இருக்கிறது.  விலை ரூபாய் இரண்டு லட்சம்.  இந்த ஐந்து லட்சம், ஆறு … Read more