கோக்கோ ஜம்போ

ஏற்காடு. நள்ளிரவு முடிந்து காலை மணி நான்கு இருக்கும். முந்தின மாலை ஏழரையிலிருந்து கேம்ப் ஃபயர் போட்டு பேசிக் கொண்டிருந்தோம். ஒரு பன்னிரண்டு பேர் இருக்கலாம். நள்ளிரவுக்கு மேல் யாரோ ஒரு பாட்டைப் போட்டார்களா, நான் ஆட ஆரம்பித்து விட்டேன். எங்கள் குழுவில் இளையராஜாவையெல்லாம் காரில் போகும்போதோ தனியாக இருக்கும்போதோதான் கேட்பார்களாயிருக்கும். இப்படி ஒன்று கூடும் போது கோக்கோ ஜம்போ மாதிரி பாடல்கள்தான். இல்லாவிட்டால் கவ்வாலி. யாரோ மார்க்ஸிடம் ஒரு கேள்வி கேட்க, விவாதம் தொடங்கியது. ஆம். … Read more

பித்தனின் பாடல்கள்: மனுஷ்ய புத்திரன்

சமீபத்தில் பிராகிருத மொழியின்  அகப்பாடல் திரட்டு ஒன்றை படித்துக்கொண்டிருந்தேன். ’காஹா சத்தசஈ’ எனப்படும் அக்கவிதைத் திரட்டிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளை தமிழில் சுந்தர் காளியும் பரிமளம் சுந்தரும் மொழிபெயர்த்திருக்கின்றனர். பொதுவாக நவீன கவிதை வாசிப்புப் பழக்கம் உள்ள எவருக்கும் கவிதை என்று தோன்றாத மிக எளிய சொற்களில் அக்கவிதைகள் எழுதப்பட்டிருந்தன.  காமத்தின் பெருமூச்சுகள், பிரிவின் பரிதவிப்புகள், காதலின் முன் இயலாமையின் ஏக்கங்கள் என விரியும் அப்பபாடல்ககளுக்கும் சங்கப்பாடல்களுக்கும் இடையே  வியக்கத்தக்க ஒற்றுமைகளைக் காணமுடிந்தது. இதை மொழிபெயர்ப்பாளர்களும் தங்கள் அறிமுக … Read more

இணையதளம் புது வடிவம்

நானும் சீனியும் பேசிக் கொண்டிருந்தபோது நம் இணைய தளத்துக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட அதற்கான சுற்றுவழியைப் பார்த்து, திகைத்து, கடந்து சென்று விடுவார்கள் என்றார். நானும் ஆமாம் என்றேன். சரி, பண உதவி செய்ய நினைப்பவர்கள் சுலபமாகப் பணம் அனுப்ப என்ன செய்யலாம் என்று தொழில்நுட்ப நண்பரோடு கலந்து ஆலோசித்தார். அதற்கு ஒரு வேண்டுகோள் எழுதச் சொன்னார். நானும், பணம் வேண்டும் என்று எழுதி அதோடு இன்னும் ரெண்டு வரி சேர்த்து அனுப்பினேன். … Read more

Chat support (சிறுகதை)

அன்னபூர்ணிதான் என்னுடைய உணவுத் துறை.  எப்போதெல்லாம் வீட்டில் உணவு இல்லையோ அல்லது ஒரே உணவையே ஐந்தாவது முறையாகத் தின்ன நேர்கிறதோ அப்போது அன்னபூர்ணிக்கு மெஸேஜ் போட்டு விடுவேன்.  என்னது, ஐந்தாவது முறையா?  இதோ கணக்கு:  நேற்று மதியம் சாம்பார்.  அதையே இரவுக்கு.  காலை இட்லிக்குத் தொட்டுக் கொள்ள.  இன்று மதியமும்.  அப்படியானால் இன்று இரவு ஐந்தாவது முறைதானே?  பிடி அன்னபூர்ணியை.  இன்று இரவு அப்படி நேர்ந்தது.  சப்வேயிலிருந்து ஒரு சாண்ட்விச் வாங்கலாம் என்று நினைத்தேன்.  அவந்திகா நான் … Read more

நன்றி மனுஷ்ய புத்திரன்

என்னுடைய கவிதைத் தொகுதியான ஸ்மாஷன் தாராவுக்கு நேற்று நள்ளிரவு மனுஷ்ய புத்திரன் எழுதிய முன்னுரை கிடைத்தது. நான் அதை அதிகாலையில் படித்தேன். ஹமீது அவர் பணி புரிந்து கொண்டிருந்த பதிப்பகத்திலிருந்து பிரிந்து வந்திருக்காவிட்டால் ஸீரோ டிகிரி பதிப்பகம் வரும் வரை நான் என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்துக் கொண்டிருந்திருப்பேன். முதல் முதலாக, துணிச்சலாக என் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்தவர் ஹமீது. என்னுடன் ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பர்கள் கூட முன் வர மறுத்த செயல் அது. … Read more

சாருவின் மொழி: போகன் சங்கர்

தமிழ் இலக்கியத்துக்கு சாருவின் பங்களிப்பு அவர் தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு திடீரென்று நீண்ட காலம் தேங்கிவிட்ட இலக்கியத்தின் மொழி நடையை நவீனப்படுத்தியதே.இது ஒரு ஆச்சரியமான விஷயம்.பழைய மொழியை பழைய உள்ளடக்கத்தை எதிர்த்து எழுதிக்கொண்டிருந்தவர்களும் அதே மொழியில்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள்.உண்மையில் புதுமைப்பித்தன் ஏற்படுத்திய உடைப்புக்குப் பிறகு அதன் அதிர்ச்சியிலிருந்து மீள்வது போல தமிழ் இலக்கிய உலகம் நீண்ட காலத்துக்கு புதுமைப்பித்தனுக்கும் முந்திய மொழிக்குப் போய்விட்டது.இந்த வகையில் சாருதான் மீண்டும் இந்த இறுக்கத்தை உடைத்தவர் எனலாம்.தனிப்பட்ட பிரதிகளாக அவரது நாவல்கள் முழுமை … Read more