தேவலோகத்து மங்கையும் சில பாடல்களும்…

நேற்றைய ரஷ்யன் செண்டர் கூட்டத்தில் நான் எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை.  300 பேர் கொள்ளளவு உள்ள அரங்கில் 100-125 பேர் தான் வந்திருந்தனர்.  போதாது.  அதிலும் லா.ச.ரா.வுக்குப் போதாது.  சரியான விளம்பரம் இல்லையோ என்னவோ.  நான் விளம்பர வேலைகளில் ஈடுபடவில்லை.  நான் ஒரு 50 நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தால் 40 பேராவது வந்திருப்பார்கள்.  எனக்கு அதற்கு நேரம் இல்லாமல் போய் விட்டது.  காரணம், திருப்பூர் கிருஷ்ணன்.  திருப்பூர் கிருஷ்ணன் பேசும் கூட்டத்தில் என்னை சிறப்புப் பேச்சாளர் … Read more

நிலவேம்புக் கஷாயம், புத்தக வெளியீட்டு விழா, இன்ன பிற…

நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரைகளை நீங்கள் படித்துப் பார்த்தால் தெரியும், இப்போது அரசாங்க விளம்பரம் மூலம் பரவலாகத் தெரிய வந்திருக்கும் நிலவேம்புக் கஷாயம் பற்றி அப்போதே எழுதியிருப்பேன்.  (இப்போதைய எழுத்தாளர்களுக்கு இப்படி ஒரு வாக்கியம் கூட எழுதத் தெரியவில்லை என்று இதை எழுதும் போது தோன்றுகிறது!)  அது ஏன் இன்று ஞாபகம் வந்ததென்றால், நேற்றைய லா.ச.ரா. கூட்டத்தில் என்னை சிறப்புப் பேச்சாளர் என்று போட்டிருந்தும் வாசகர் வட்டத்திலிருந்து ஐந்து பேர் தான் வந்திருந்தனர்.  அந்த … Read more