பிரபு காளிதாஸ்

ஆர்ட் ரெவ்யூ ஏஷியா வரை போய் விட்டார் பிரபு.  பிரபுவின் புகைப்படங்களை ஆர்ட் ரெவ்யூ ஏஷியா ஆசிரியர் வியந்து வியந்து பாராட்டுகிறார்.  விரைவில் நியூயார்க்கரிலும் அவருடைய படைப்புகள் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆசிகள்.  அவருடைய செயல்பாடுகளில் உற்ற துணையாக இருக்கும் ராதாவுக்கும் வாழ்த்துக்கள். (தொகுப்பில் ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் வந்த புகைப்படங்களையும் – ரஜினி – சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.)

எது இந்துப் பாரம்பரியம்?

பட்டாசு வெடிப்பது நல்லதல்ல என்று சொன்னால் சில அறிவுக் கொழுந்துகள் நீ இந்தியப் பாரம்பரியத்துக்கு எதிராகப் பேசுகிறாய் என்று குற்றம் சாட்டுகின்றனர்.  எது இந்தியப் பாரம்பரியம்?  எது இந்துப் பண்பாடு?  பட்டாசு வெடிப்பதா?  இதோ ட்டி.ஆர். விவேக் பிரித்து மேய்ந்திருக்கிறார்.  படித்துப் பாருங்கள். http://scroll.in/article/820461/is-complaining-about-diwali-cracker-pollution-really-a-case-of-hindu-shaming

சுப மங்களா

கோமல் சுவாமிநாதனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த சுப மங்களா இதழ் கோமல் காலமானதும் நின்று போனது.  அதை ஈடு செய்வதற்கு வேறு எந்தப் பத்திரிகையாலும் முடியவில்லை.  சுப மங்களாவில் தமிழ் இலக்கியத்தின் எல்லா தரப்பினரும் எழுதினார்கள்.  என்னுடைய திர்லோக்புரி கதையும் அதில் தான் வெளிவந்தது.  சுப மங்களா இதழ் இப்போது இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது.  பயன்படுத்திக் கொள்ளுங்கள். http://www.subamangala.in/