டாக்டர் அயெந்தே உங்கள் இல்லத்துக்கு வந்திருக்கிறாரா?

நேற்று தமிழ் ஸ்டுடியோஸ் அருணின் மாணவர்கள் மூன்று பேர் என்னைப் பேட்டி கண்டார்கள்.  ஒளிப்பதிவு செய்யப்பட்டது.  மொத்தம் நான்கு மணி நேரம்.  இப்படி ஒரு பேட்டியை நான் இதுவரை கொடுத்ததில்லை.  இனிமேலும் கொடுக்க முடியும் என்று தோன்றவில்லை.  காரணம், அந்த அளவுக்கு என்னை வாசித்திருந்தார்கள்.  அவர்கள் தென்னமெரிக்க நாடுகள் பற்றிக் கேட்ட போது என் கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டன.  ஏன் கலங்க வேண்டும்?  40 ஆண்டுக் காலமாக தொலைதூரத்தில் இருக்கும் தன் தாயைக் காணாத ஒருவனின் … Read more

அராத்துவின் ‘பனி நிலா’

இந்த ஆண்டு ஜனவரி மாதம் அராத்துவின் பனி நிலா என்ற கதையைத் தட்டச்சுப் பிரதியில் படித்தேன்.  அப்போது நான் அவரிடம் சில வார்த்தைகளைச் சொன்னேன்.  அதே வார்த்தைகளை – ஒரு வார்த்தை பிசகாமல் – சாதனா இதே கதை பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார்.   உங்களால் நம்ப முடியாது.  கதையைப் படித்து விட்டு இதே வார்த்தைகளைத்தான் அராத்துவிடம் சொன்னேன். “விகடனில் அராத்துவின் ‘பனி நிலா’ வாசித்தேன். ஒரே வார்த்தையில் சொல்வதாகயிருந்தால் அபாரம். அந்தக் கதை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னமும் … Read more

தினம் ஒரு புத்தகம்

தினம் ஒரு புத்தகம் என்று கடந்த 66 தினங்களாக அதன் அட்டையை மட்டும் முகநூலில் கொடுத்து வருகிறேன்.  பல நண்பர்கள் இந்தப் புத்தகங்களை வாங்குகிறார்கள்; படிக்கிறார்கள்.  இதற்குக் காரணமாக இருந்தவர் காயத்ரி.  அவருக்கு என் நன்றி.  இன்று முதல் இந்த இடத்திலும் இதைப்  பதிவிடுகிறேன்.  இன்று 67-ஆவது நாள்.