நான்கு மணி நேர நேர்காணல் – பகுதி 1

ஓரிரு தினங்களுக்கு முன்பு அருணின் தமிழ் ஸ்டுடியோவின் மாணவர்கள் மூன்று பேர் வந்திருந்தனர். ஒரு பேட்டிக்காக. மொத்தம் நான்கு மணி நேரம் சென்றது. இது போன்ற ஒரு பேட்டியை என் வாழ்நாளில் நான் கொடுத்ததில்லை. இனிமேலும் நடக்குமா என்று தெரியாது. ஒரே காரணம், மாணவர்கள் என் எழுத்தை அவ்வளவு ஆழ்ந்து வாசித்திருந்தனர். ஒரு உதாரணம் சொல்கிறேன். என் நண்பர்கள் எத்தனை பேருக்கு எனக்கு மிகப் பிடித்த பழம் எது என்று தெரியும்? ஆப்பிள்? சாத்துக்குடி? மாதுளை? செர்ரி? … Read more

வரி கட்டியிருக்கிறாயா?

நான் சாந்தோம் நெடுஞ்சாலையில் வெய்ட் ரோஸ் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மாடியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறேன்.  இங்கே ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் வசிக்கிறார்.  இங்கே தினமும் ஆறு மணி நேரம் மின் வெட்டு உள்ளது.  நேற்று பதிமூன்று முறை மின்சாரம் போய் போய் வந்தது.  மொத்தம் ஏழு மணி நேரம் மின்சாரம் இல்லை. அப்புறம் நேற்று பெரிய மின்வாரிய அதிகாரியைத் தொடர்பு கொண்டு காலில் விழுகிறேன் கையில் விழுகிறேன் என்று கெஞ்சியதால் இன்று அப்படி இல்லை.  … Read more