சினிமா ரசனை – பயிற்சி வகுப்புகள்

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7 , மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். கூகிள் மேப்பில் pure cinema book shop என்று தேடினால் எளிதாக கண்டடையலாம். நண்பர்களே, புதுப்பிக்கப்பட்ட பியூர் சினிமா புத்தக அங்காடியில் முதல் கலந்துரையாடல் நிகழ்வாக சாரு நிவேதிதாவுடன் கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது. நிகழ்கால தமிழ் சினிமா எனும் தலைப்பில் இந்த கலந்துரையாடலில் தமிழில் … Read more

பாரினிலே நல்ல நாடு!

”நம் நாட்டைப் பற்றி ஏன் லண்டனிலிருந்து வெளிவரும் ArtReview Asia பத்திரிகையில் எப்போதும் இழிவாகவே எழுதுகிறீர்கள்? நல்லதாக எழுத எதுவுமே இல்லையா?” என்று கேட்கும் நல்லிதயங்களுக்கு இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன். அந்த நல்லிதயங்களிடம் நான் தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒரு ரெண்டு நிமிடம் செலவு செய்து இந்தக் கட்டுரையைப் படியுங்கள் என்பதுதான். இந்தக் கேடுகெட்ட துப்புக் கெட்ட நாட்டைப் பற்றி நான் எப்படி நல்லதாக எழுத முடியும்? உடம்பே புழுத்து நாறிக் கொண்டிருக்கும் போது ஒருத்தரின் மயிர் … Read more

மெதூஸாவின் மதுக்கோப்பை – முன்பதிவு

  ஃப்ரெஞ்ச் இலக்கியம் தவிர்த்து என்னை உருவாக்கிய மற்றொன்று, ஐரோப்பிய சினிமா. குறிப்பாகச் சொன்னால், ஜெர்மன் மற்றும் ஃப்ரெஞ்ச் சினிமா. இன்று உலக சினிமாவில் ஹாலிவுட் மற்றும் ஜப்பானிய, கொரிய, ஈரானியத் திரைப்படங்களுக்குக் கொடுக்கப்படும் ஆரவாரமான வரவேற்பும் கவனிப்பும் ஜெர்மன் சினிமாவுக்குக் கிடைப்பதில்லை. ஆனால் திரையுலக வரலாற்றின் முதல் சயன்ஸ் ஃபிக்ஷன் சினிமா ஜெர்மனியில்தான் எடுக்கப்பட்டது. 1927-ஆம் ஆண்டு Fritz Lang இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்ரோபலிஸ்’ தான் உலக சினிமா வரலாற்றின் முதல் சயன்ஸ் ஃபிக்ஷன் படம். … Read more

தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்

இணையத்தில் வாங்க: https://www.amazon.in/dp/9387707172 *** சாதனாவின் ’தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ என்ற இந்த சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுத அமர்ந்த போது அது அத்தனை சுலபமானது அல்ல என்று உணர்ந்தேன். ஏனென்றால், ஜார்ஜ் பத்தாயின் (Georges Bataille) மரணம் பற்றிய கட்டுரையையும், eroticism பற்றிய கட்டுரைகளையும் படிக்காமல் எழுதுவது இந்தத் தொகுதிக்கு நியாயமானதல்ல என்று தோன்றியது. தமிழில் முதல் முதலாக மரணமும் பாலியலும் இணையும் ஒரு பிரதியைப் படிக்கிறேன். சம்பத்தின் இடைவெளி மரணம் … Read more

மெதூஸாவின் மதுக்கோப்பை : சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஃப்ரெஞ்ச் துறையில் நான் ஆற்றிய உரை

மதுரை நண்பர்கள் மதுரை புத்தக விழாவில் லியோ புத்தக அரங்கில் மெதூஸாவின் மதுக்கோப்பையை வாங்கிக் கொள்ளலாம். என் எழுத்து வாழ்வில் மெதூஸாவின் மதுக்கோப்பை தான் ஆக முக்கியமான புத்தகம். ஏனென்றால், அது என்னுடைய ஃப்ரெஞ்ச் தொடர்பைப் பேசுகிறது. எனக்கு ஃப்ரெஞ்ச் இலக்கியம் தெரியாது; சாருவுக்கு ஃப்ரெஞ்ச் இலக்கியம் தெரியும். என் புத்தகமும் நாலு பிரதி விற்கிறது; சாருவின் புத்தகமும் நாலு பிரதி விற்கிறது என்று ஒரு அன்பர் எழுதியிருந்தார். அது தவறு. அவர் புத்தகம் நாற்பதாயிரம் பிரதி … Read more