இப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…

நான்கைந்து நாட்களாக நாகேஸ்வர ராவ் பூங்காவில் தனியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறேன்.  ராகவன் வெளியூர் போய் விட்டார்.  அப்படித்தான் சொல்லுவார்.  எந்த ஊர் என்று சொல்ல மாட்டார்.  நானும் கேட்க மாட்டேன்.  ஆனால் மனசுக்குள் நினைத்துக் கொள்வேன், இதெல்லாம் மகா பெரிய ராணுவ ரகசியம் போல என்று.  ஆனால் இன்னொரு நண்பர் இதை விட பயங்கரம்.  சாய்ந்தரம் சந்திப்போமா என்று போன வாரம் கேட்டேன்.  நான் ஊர்ல இல்லியே சாரு என்றார்.  ஆஹா ஆஹா என்று மனசு குதியாட்டம் … Read more

அய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை

முள்ளம்பன்றிகளின் விடுதிஅய்யனார் விஸ்வநாத்தின் சிறுகதைத் தொகுதிக்கு அடியேனின் முன்னுரை ’சிறுகதையில்தான் எல்லாவற்றையும் எழுதி முடித்தாயிற்றே, இனிமேல் என்ன இருக்கிறது?’ என்பதுதான் என் பொதுவான நினைப்பாக இருந்தது. ’சிறுகதை செத்துப் போய் விட்டது’ என்றெல்லாம் கூட நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன். அந்தக் கருத்து ஹாருகி முராகாமியின் Man-Eating Cats, The Strange Library போன்ற சிறுகதைகளைப் படித்த போது மாறியது. சிறுகதை குறித்த என் எண்ணத்தையே மாற்றிய அம்மாதிரியான கதைகளையே அய்யனார் விஸ்வநாத் எழுதியுள்ள இந்த முள்ளம்பன்றிகளின் விடுதி … Read more

முள்ளம்பன்றிகளின் விடுதி : அய்யனார் விஸ்வநாத்

அய்யனார் விஸ்வநாத்தின் முள்ளம்பன்றிகளின் விடுதி என்ற சிறுகதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் காட்சிப் பிழை என்று ஒரு சிறுகதை உள்ளது. சில வெப்சீரீஸைப் பார்க்கும் போது அதன் த்ரில் தாங்க முடியாமல் எனக்கு நெஞ்சு வலி வந்து விடும். கொஞ்ச நேரம் பார்ப்பதை நிறுத்தி விட்டுத் தொடர்வேன். சிலதைப் பார்க்கவே முடியாது. கடைசியில் பார்த்து விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்வேன். நெஞ்சு வலி வராது. வாசிக்கும் போது அநேகமாக இப்படி நடப்பதில்லை. காட்சி ரூபக் … Read more

பிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி?

என் நண்பர் ராமசேஷனும் நானும் இணைந்து “பிழையில்லாத தமிழ் எழுதுவது எப்படி?” என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறோம். வேறு ஏதாவது வசீகரமான தலைப்பு இருந்தால் நண்பர்கள் சொல்லலாம். (இதுவே இப்போதைய இளவட்டங்கள் என்றால் வேறு ஏதாவது அட்ராக்டிவ் தலைப்பு இருந்தால் சொல்லலாம் என்று எழுதுவார்கள். அட்ராக்டிவ் என்பதற்கு உடனடியாக அவர்களுக்குத் தமிழில் என்ன வார்த்தை என்று ஞாபகம் வராது. யோசிக்கவும் நேரம் இருக்காது. அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழ்ப் பணி செய்தால் இதுவே அதிக பட்சம்). … Read more

எங்கே உன் கடவுள்?

கேள்வி: நீங்கள் துக்ளக் இதழில் எழுதத் தொடங்கிய போது, உங்கள் கொள்கைகளிலிருந்து சமரசம் செய்துகொண்டுவிட்டீர்கள் என்று விமர்சனம் எழுந்ததே? பதில்: துக்ளக்கில் எழுதுவது சமரசம் செய்துகொள்வதல்ல. சமரசம் என் ஆன்மாவில் படியும் கறை. ஒரு போதும் அதை நான் செய்ய மாட்டேன். இதுவரை செய்ததும் இல்லை. சொல்லப்போனால் துக்ளக்கில் எழுதியபோது எனக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதற்கும் நான் அஞ்சவில்லை. எனக்கு 9 வயதுச் சிறுமியிடமும் 90 வயது முதியவரிடமும் சொல்வதற்குச் செய்திகள் இருக்கின்றன. துக்ளக் கட்டுரையைப் … Read more