பழுப்பு நிறப் பக்கங்கள்

சாருவின் பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்று தொகுதிகளையும் படித்து முடித்த பின்பு, அதில் அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் எல்லா எழுத்தாளர்களையும் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். எந்த ஒரு எழுத்தாளரும் மற்ற எழுத்தாளர்கள் பற்றி அறிமுகப்படுத்தி இத்தனை விரிவாக எழுதுவார்களா என்று தெரியவில்லை. சாரு செய்திருப்பது மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை என்றே சொல்ல வேண்டும். இதுவரை அவர் பரிந்துரைத்த எல்லா எழுத்தாளர்களின் எழுத்து நடையிலும் சரி, மொழியிலும் சரி, எனக்கு இலக்கியத்தின் மீது இதுவரை இருந்து … Read more

தில்லையின் தாயைத்தின்னி: பெண்ணுடலின் அரசியல் குறித்த ஒரு மாடர்ன் க்ளாஸிக்

ஐரோப்பிய இலக்கிய வாசகர்கள் மற்றும் இலக்கிய நிறுவனங்களின் ரசனை, குருதி வேட்கையுடன் அலையும் ஓநாய்களையே ஒத்திருக்கிறது.  ஆசியா மற்றும் ஆஃப்ரிக்க மக்களின் போர் அனுபவங்கள், போரின் அவலங்கள், துயரங்கள் போன்றவற்றையே அவர்கள் இலக்கியம் என வரையறுத்து ரசித்து ருசிக்கிறார்கள்.  பள்ளிக்கூடத்தில் ஏவுகணை விழுந்து அதில் செத்துப் போன நூற்றுக்கணக்கான சிறார்கள், ராணுவத்தினரால் வன்கலவி செய்யப்பட்ட பெண்கள், கண்ணி வெடியில் கைகால் இழந்த மனிதர்கள், நாட்டையும் வீட்டையும் இழந்து அகதிகளாய் அந்நிய நிலத்துக்கு வெளியேறும் அனாதைகள் என ’கடவுளால்’ … Read more

கெட்ட வார்த்தை (சென்ற கட்டுரையின் தொடர்ச்சி)

அன்புள்ள ———க்கு, காலையில் எழுந்ததும் நீ அனுப்பியிருந்த பத்துப் பதினைந்து வாட்ஸப் தகவல்களைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்தேன்.  மகிழ்ச்சிக்குக் காரணம் அந்த நடிகர்.  அவரிடம் அவரது நெருங்கிய நண்பர்களால்கூட மாற்றுக் கருத்தைத் தெரிவிக்க முடியாது.  தெரிவித்தால் அவர் அவர்களை ஜென்ம விரோதிகளாகக் கருத்த் தொடங்குவார்.  உதாரணமாக, அவர் அடிக்கடி எழுதி வெளியிடும் கவிதைகளை “குப்பை” என்று சொல்ல அவரைச் சுற்றி ஒருத்தரும் இல்லை.  இத்தனைக்கும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் இலக்கிய ஜாம்பவான்கள்.  சொல்ல முடியும்தான்.  ஆனால் சொல்வதற்கான … Read more

உங்கள் அழுக்கை என் மூஞ்சியில் அடிக்காதீர்கள்!!!

இந்தக் கட்டுரையின் தலைப்பு “உங்கள் மூத்திரத்தை என் மூஞ்சியில் அடிக்காதீர்கள்” என்றுதான் இருக்க வேண்டும். இருந்தாலும் தலைப்பிலேயே மூத்திரம் என்று வருவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதால் அழுக்கு என்று வைத்திருக்கிறேன். தில்லையின் தாயைத்தின்னி நாவலுக்கு ஒரு நீண்ட மதிப்புரை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு நடுவில் வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். நகம் நீண்டு கிடக்கிறது. முடி காடு மாதிரி வளர்ந்து விட்டது. இதுபோல் இன்னும் பல ஜோலிகள். எதையும் செய்யவில்லை. தில்லையின் தாயைத்தின்னி … Read more

ஆக்ஸ்ஃபோர்ட் புத்தக அட்டை விருது

Oxford Bookstore நிறுவனம் வழங்கும் சிறந்த புத்தக அட்டை விருதுக்கான குறும்பட்டியலில் Conversations with Aurangzeb நாவலின் முகப்பு அட்டை இடம்பெற்றுள்ளது.