சாகத் தயார் (4)

நாற்பது வருடம் பட்ட அடியினால் இலக்கியவாதிகள் என்றாலே அலர்ஜியில் இருந்தேன்.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  பல ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் ஒரு இலக்கியக் கூட்டம்.  நான் சிறுகதைகள் பற்றிப் பேசினேன்.  மதியம் மூன்று மணி.  லேசாக மது அருந்தியிருந்தேன்.  கலா மோகன், கோபி கிருஷ்ணன் ஆகியோரின் சிறுகதைத் தொகுதிகளை சிலாகித்துப் பேசினேன்.  (கலாமோகன் பாரிஸில் வசிப்பவர்.)  அப்போது ஒரு நாகர்கோவில் பிரபலம் கோபியிடம் தெரிவது நிஜமான madness, சாருவிடம் தெரிவது போலி என்று விரிவாகப் பேசினார்.  சரி, … Read more

சாகத் தயார் (3)

இலக்கியம் விளக்கு. அது ஒளிகொடுக்கும், வழிகாட்டும். ஆனால் தனக்குக் கீழே விழும் சொந்த நிழலை விலக்க விளக்கினால் முடியாது. அது காளிதாசனின் உவமை. அந்த அகங்காரத்தின் நிழலைக் கண்டு அஞ்சித்தான் மாபெரும் கலைஞர்கள்கூட இலக்கியத்தைவிட பெரிய ஒன்றின் காலடி தேடினார்களா? ‘எனக்கு ஒரு கடிகையில் தேசபக்தியையும் ஞானத்தையும் அளித்த விவேகானந்தரின் தர்மபுத்திரியான நிவேதிதா தேவிக்கு’ என்று பாரதி தன் கவிதைகளை காலடியில் சமர்ப்பணம் செய்கிறான் செல்லப்பாவுக்குத் தேவை அத்தகைய ஒரு சன்னிதி என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்கான … Read more

சாகத் தயார் (2)

முதல் பதிவைப் படித்து விட்டு எனக்கு ஜெ. மீது பொறாமை என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.  ஏற்கனவே என் பேச்சில் கூறியபடி ஜெயமோகனோ எஸ். ராமகிருஷ்ணனோ எனக்குப் போட்டியாளர்கள் அல்ல.  நான் போட்டியாளர்களாக நினைப்பது ஓரான் பாமுக்கையும் ஸல்மான் ருஷ்டியையும்தான்.  நான் சர்வதேச அளவில் வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.  அந்த விருப்பதையும் மிக வெளிப்படையாகச் சொல்லி வருகிறேன்.  என்னிடம் எதுவுமே ஒளிவு மறைவு இல்லை. பொதுவாகவே லட்சியவாதம் என்பது ஃபாஸிஸம் நோக்கித்தான் நம்மை இட்டுச் … Read more

சாகத் தயார்! (திருத்தப்பட்டது)

மது அருந்துவதை நிறுத்தியதால்தான் என் உயிர் இப்போது என் வசம் இருக்கிறது.  இல்லாவிட்டால் இந்நேரம் எனக்கு ஜெயமோகன் அஞ்சலிக் கட்டுரை எழுதியிருப்பார்.  ஒரு தனிப்பட்ட  இலக்கிய விவாதத்தில் ஜெயமோகனின் நூறு சந்நிதானங்கள் என்ற கதையைப் பற்றி நான் விமர்சித்ததும் ஒருவர் என்னை அடிக்க வந்தார்.   தன் இருப்பிடத்திலிருந்து எழுந்து ஆவேசமாக என்னை நோக்கி மிக மிக அசிங்கமான வசை வார்த்தைகளைப் பிரயோகித்தபடி வந்ததை, எனக்கு முத்தம் கொடுக்க வந்தார் என்றா புரிந்து கொள்ள முடியும்?  அடிக்கத்தான் … Read more