எம்.வி. வெங்கட்ராம் – பகுதி (3)

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு மாத்யமம் பத்திரிகையில் நான் எழுதி வந்த கோணல் பக்கங்கள் என்ற தொடர் கேரளத்தில் மிகவும் பிரபலமான ஒரு பத்தி.  குறிப்பாக வட கேரளத்தில்.  மாத்யமம் பத்திரிகை வார இதழ்.  நான் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எழுதியதாக ஞாபகம்.  நான்கு ஆண்டுகள் எழுதினேன். அது ஒரு இஸ்லாமியக் கலாச்சார அமைப்பால் நடத்தப்படுவது.  அதில் நான் எழுதியது பற்றி மலையாள எழுத்துலகில் என் மீது மதரீதியான முத்திரையும் குத்தப்பட்டது. அது பற்றி நான் கவலைப்பட்டது இல்லை. … Read more

தனிமையின் நிழலில்…

சமீபத்தில் எனக்கு வந்த ஒரு முக்கியமான கடிதத்தைப் பற்றி வாசகர்களோடு என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். நண்பர் எனக்குப் பிடித்த எழுத்தாளர். இளைஞர். இது மிகவும் அபூர்வமாகவே நிகழ்வது. வாழும் எழுத்தாளர்களில் எனக்குப் பிடித்தவர்கள் என்றால் அவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இவரோ மிகவும் இளைஞர். வெகுஜனரீதியாக மக்களின் சிந்தனை ஓட்டத்தில் சில பல சீரிய மாற்றங்களைச் செய்து விடக் கூடிய இடத்தில் இருப்பவர். செய்து கொண்டும் இருக்கிறார். ஆனால் இவரை ஐந்து பத்து நண்பர்களைத் … Read more

எழுதி விடாதீர்கள்…

மற்ற எழுத்தாளர்களுக்கு எப்படியோ, எனக்கு ஒரு விசேஷமான அனுபவம் கிடைத்தபடி இருக்கிறது. என்னைச் சந்திக்கும் எல்லோருமே ஒரு விஷயத்தைத் தவறாமல் என்னிடம் சொல்கிறார்கள்.  “என்னைச் சந்தித்தது பற்றி எழுதி விடாதீர்கள்.”  ஒருத்தர் சொன்னால் பரவாயில்லை.  சந்திக்கும் அத்தனை பேருமே சொல்கிறார்கள் என்றால் இதில் ஏதோ சூட்சுமம் இருக்க வேண்டும்.  என்ன என்றுதான் தெரியவில்லை. ஆனால் சென்ற வாரம் சந்தித்த நண்பர் சொன்ன போது காரணம் கேட்டேன்.   ”நீங்கள் குறிப்பிட்டு எழுதும் அளவுக்கு நான் பெரிய ஆள் … Read more