ஒரு சிறிய ஞாபகமூட்டல்

பல வாசக நண்பர்கள் க.நா.சு. பற்றிய என் உரையின் பதிவைக் கேட்டு எழுதி வருகின்றனர். ஒரு ஐம்பது பேர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 47 பேர் இதுவரை சாருஆன்லைனுக்கு சந்தா அல்லது நன்கொடை அளிக்காதவர்கள். ஒவ்வொருத்தருக்காக நான் வேலை மெனக்கெட்டு “கட்டணம் இல்லாமல் அனுப்புவதில்லை; இதுவரை கட்டணம் இல்லாமலேயே இருபது ஆண்டுகளாகப் பேசி வந்திருக்கிறேன். இனிமேல் கட்டணம் வாங்குவதாக முடிவு செய்திருக்கிறேன். கட்டணம் வாங்காமல் இருந்தால் உரையின் பதிவை நான் நம்முடைய இணைய தளத்தில் நான் … Read more

பூச்சி 111

சனி ஞாயிறுகளில் காலை நேர நடைப் பயிற்சி இசையிலேயே கழிகிறது.  வீட்டிற்குள் நடந்தால் மட்டுமே அது சாத்தியம்.  மாடிக்குப் போனால் நெட் இணைப்பு போய் விடுகிறது.  இசை கேட்க முடியவில்லை.  அங்கே கிளிகள்தான்.  எதிர்த்த வீட்டு மரங்களில் நூற்றுக்கணக்கான கிளிகள்.  அதிலும் அந்தப் பஞ்சவர்ணக் கிளியின் பேச்சைக் கேட்பதென்றால் அது ஒரு அற்புதம்.  சனி ஞாயிறுகளில் மட்டும் வீட்டுக்குள்ளேயே “எட்டு” போட்டு விடுவேன்.  Infinite walking என்று சொல்வார்கள்.  முழுக்க முழுக்க பாகிஸ்தானின் கோக் ஸ்டுடியோதான்.  இந்திய … Read more

முன்னோடிகள் – 16

மூன்று தினங்களாக முழு மூச்சாக எடிட்டிங் வேலையில் மூழ்கிக் கிடந்தேன்.  அதை முடித்தால்தான் பிற வேலைகளை கவனிக்க முடியும்.  இன்னும் ஒரு பத்து நாள் அதில் போகும்.  இன்று காலை ராகவனோடு நீண்ட நேரம் பேச முடிந்தது.  சி.சு. செல்லப்பா பற்றிய என் உரையைக் கேட்டாராம்.  மிகவும் சிலாகித்துச் சொன்னார்.  ராகவனிடம் ஒரு திறமை உண்டு.  எவ்வளவு சின்ன தப்பாக இருந்தாலும் கண்டு பிடித்து விடுவார்.  அவர் கண்ணுக்கோ காதுக்கோ அது மாட்டி விடும்.  ஜீவனாம்சம் நாவலில் … Read more