இலக்கியத்தில் ஓர் இடம்!

“சாரு என்னை எப்படியெல்லாமோ விதந்தும் புகழ்ந்தும் பேசிவந்தபோதெல்லாம் ‘அதெல்லாம் சும்மா அடிச்சுவிடுகிறார்..இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது’ என்ற புரிதலோடு எப்படி நான் இருந்தேனோ, அதுபோலவே இப்போது சாருவால் பாராட்டப்படும் இளைஞர்களும் இருந்துகொள்ளுங்கள். அதுவே இலக்கிய ஈடேற்ற வழி.>> இவ்வாறு May 24, 2017 இல் எழுதியிருந்தீர்கள். ஆகவே இதெல்லாம் சும்மா அடிச்சுவிடுகிறார். இலக்கிய விமர்சனத்திலோ அல்லது இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது என்ற புரிதலோடுதான் இப்போதும் இருக்கிறீர்களா ஷோபா? … Read more

நிஜமான நான்…

ஒழுக்கத்துக்கும் நேரம் தவறாமைக்கும் நான் பேர் பெற்றவன்.  காலை ஏழு மணி என்றால் ஆறே முக்காலுக்கே போய் நிற்பேன்.  ஆனால் அந்த சாரு நிஜமான சாரு அல்ல.  சிறை வாழ்க்கையில் கிடைக்கும் ஒழுங்கு அது என்று இன்று புரிந்து கொண்டேன்.  காலை ஏழு மணிக்கு கிரஹப் பிரவேசத்துக்கு வந்து விடுகிறேன் என்றேன்.  ஐந்து மணிக்கு ஹோமம்.  அவ்வளவு சீக்கிரம் முடியாது, ஏழுக்கு ஆஜராகி விடுவேன் என்று சொல்லியிருந்தேன்.  ஆனால் உறங்குவதற்கே மூன்று மணி ஆகி விட்டது.  அனிருத் … Read more

கொண்டாட்டம்

ஒரே ஒரு பாடல் மக்களை எந்த அளவுக்குப் பித்துப் பிடிக்க வைக்கும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம். இந்தப் பாடலின் ஆடல் அசைவுக்குச் சொந்தக்காரரான ஜானி மாஸ்டரைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அவர் கொரியாக்ராஃப் செய்த அரபிக் கூத்து போன்ற பாடல்களிலேயே ஜானி மாஸ்டரின் திறமை தெரிந்தது. இந்தப் பாடலுக்கு ஆடும் போது ஆடுபவர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியில் உச்சத்தில் சிரிக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். குறிப்பாக மூன்று தம்பிகள் ஆடுவது பிரமாதம். ஆடலின் அசைவுகளை … Read more

தொல்காப்பியர் பூங்கா என்ற வனத்தில்…

இன்று காலை என் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் உள்ள ஒரு வனத்தில் (தொல்காப்பியர் பூங்கா என்று பெயர்) நடைப் பயிற்சி சென்ற போது ராகவன் எடுத்த நிழல்படம்

பறக்கப் பறக்கத் துடிக்குதே… எக்ஸ்டஸியின் உச்சம்

கடந்த இரண்டு தசாப்தங்களாக சினிமா பாடல் ரசிகர்களிடையே ஒரு புகார் உண்டு. பழைய பாடல்களைப் போல் இப்போதைய பாடல்களில் பாடல் வரிகளையே கேட்க முடிவதில்லை. ஒரே இரைச்சல். வாத்தியக் கருவிகளின் ஓசையில் பாடல் வரிகளே புரிவதில்லை. எல்லாம் ஒரே ஊளை சத்தம். பாடலாசிரியர்களும் சப்தத்துக்கு ஏற்ப வார்த்தைகளை இட்டு நிரப்பிக் கொடுக்கிறார்கள். நினைக்கத் தெரிந்த மனமே மாதிரி ஒரு பாடல் இப்போது வருகிறதா? இந்தக் குற்றச்சாட்டு எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறாற்போல் ஒரு பாடலைக் கேட்டேன். திரும்பத் திரும்ப … Read more

கருணையின் நிழலில்…ஷோபா சக்தியின் ஸலாம் அலைக் நாவலினூடே ஓர் பயணம் (2)

இந்த உலகத்தில் ஒரே ஒரு கதைதான் இருக்கிறது என்ற வாக்கியம் ஸலாம் அலைக் நாவலில் பல இடங்களில் வருகிறது.  அந்த ஒரே ஒரு கதை என்ன? நம்பிக்கைகளுக்காகவும், கொள்கை-கோட்பாடு-சித்தாந்தம்-தத்துவம் போன்றவற்றுக்காகவும் மனிதரை மனிதர் கொலை செய்கிறார்கள்.  அதுதான் அந்த ஒரே ஒரு கதை.  அந்தக் கதைதான் இலங்கையில் நடந்தது.  இன்று இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.  வாழ்க்கை பற்றிய தன்னுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஜெபானந்தன் எதிரானவனாக இருப்பதால் மட்டுமே தான் உயிருக்குயிராய் காதலித்த உமையாள் அவனைப் பிரிகிறாள். (”தீராதது போலத் … Read more