சொற்கடிகை 14: தியானம் கற்றுக் கொள்வது எப்படி?

அது ஒரு பெரிய இடம். ஒய்.எம்.சி.ஏ. மைதானம். சுற்றி வர புத்தகங்களாக இருக்கும். புத்தகங்களுக்கு நடுவே தியானம் செய்வது நம் ஜக்கி கூட முயற்சிக்காதது. ராம்ஜி, காயத்ரி, வித்யா மூவரும் ஒரு இடத்தில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தார்கள். காயத்ரிக்குக் கொஞ்சம் தியானம் வராது. லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்தவள் அமர்ந்து அமைதியாக தியானம் செய்யும் படி என்னிடம் சமிக்ஞை செய்தாள். பக்கத்து வீட்டில் வேடியப்பனும் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். மூன்றரையிலிருந்து ஏழரை வரை மகா தியானம் செய்து … Read more

சொற்கடிகை – 13

ஹொடரோவ்ஸ்கியின் புகைப்படத்தைப் பார்த்து என் ஞாபகம் வந்ததாக ரிஷி, அய்யனார், வினித் மற்றும் இன்னும் இரண்டு மூன்று நண்பர்கள் எனக்கு மெஸேஜ் செய்திருந்தார்கள்.\ ஔரங்ஸேப் முடிந்த கையோடு ஒரே வாரத்தில் ம்யாவ் என்று ஒரு இருநூறு பக்க நாவல் வரும். அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது எழுதி வருகிறேன். அவ்வளவாக நிறைய பேருக்குப் பிடிக்காது. ஓரிரு அத்தியாயங்களைப் படித்து இயக்குனர், ஒளிப்பதிவாளர் செழியன் நாவலுக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார். சீனிக்கும் பிடித்திருந்தது ஆச்சரியம்தான். அதற்கான உட்பக்கப் படத்தில் இப்படி ஒரு … Read more

சொற்கடிகை – 12: ஓஷோவின் குரலில்…

இதுதான் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் வைத்து நடந்த சம்பவம்.  சம்பவத்துக்கும் பதிப்பகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  ஒளிப்பதிவு அங்கே நடந்தது.  அவ்வளவுதான்.  ஒரு தொலைக்காட்சியின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொறுப்பாளர் என்னை அழைத்தார்.  அழைத்து ஒரு வாரம் இருக்கும். புத்தக விழா சம்பந்தமா உங்கள்ட்ட ஒரு பைட் எடுக்கணும் சார்.  உங்கள் புத்தகங்களில் ஒரு ஆறு புத்தகம் பற்றிப் பேச வேண்டும் சார். என்னது, ஆறு புத்தகமா? ஆமாம் சார், ஆறு இல்ல அதுக்கும் மேல வேணும்னாலும் … Read more

சொற்கடிகை – 11

11 ஔரங்ஸேப் இன்னொரு அத்தியாயம் எழுத வேண்டும்.  அதனால் அந்த அதிரடி விஷயத்தை நாளை எழுதுகிறேன்.  பில்டப் கொடுக்கவில்லை.  உண்மையிலேயே அதிரடிதான்.  நீண்ட கதை என்பதால் நேரம் வேண்டும். அதற்கு முன்னால் வேறொரு விஷயம்.  அருண்மொழி நங்கையின் புத்தக வெளியீட்டு விழா முடிந்து வெளியே வந்து ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  அஜிதனும் வந்தார்.  பேசினேன்.  ஜெயமோகன் கட்டம் போட்ட சட்டை போடாமல் வந்தது மனசுக்கு ஆறுதலாக இருந்தது.  அஜிதன் படு ஸ்மார்ட்டாக இருந்தார்.  மூன்று வயதில் பார்த்தது.  … Read more

சொற்கடிகை – 10

(ஆணின் ஜனன ஸ்தானத்தைக் குறிக்கும் ஒரு மூன்று எழுத்து கெட்ட வார்த்தை இக்கட்டுரையில் மூன்று நான்கு முறை வருகிறது.  அந்த வார்த்தையை அலர்ஜியாகக் கொண்ட கொழுந்துகள் இதைப் படிக்க வேண்டாம்…) மூன்று நான்கு தினங்களாக இந்தப் பக்கம் வராத காரணம்தான் இன்றைய கதை.  ஒருநாள் அருண்மொழி நங்கையின் பனி உருகுவதில்லை நூல்.   ஒருநாள் ஔரங்ஸேப் உர்தூ மொழிபெயர்ப்புக்காக சில சந்திப்புகள்.  நேற்று ஒரு நபரிடம் மாட்டிக் கொண்டேன்.  முழு நாளும் காலி. நாலைந்து நாட்களுக்கு முன்பு தெரியாத … Read more