புதிய இடம், புதிய சூழல்…

கடந்த ஒரு ஆண்டு காலமாக நான் சாந்தோம் வீட்டு மொட்டை மாடியில்தான் நடைப் பயிற்சி போய்க்கொண்டிருந்தேன். அதற்கு ஷூ போட வேண்டாம். உள்ளாடை அணிய வேண்டிய அவசியம் இல்லை. ஜட்டி என்று எழுத கூச்சமாக இருக்கிறது. இந்த ஜட்டி என்ற சிறிய துணி அய்ட்டம் இளம் வயதிலிருந்தே எனக்குப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பதினாறு வயது வரை ஜட்டி கிடையாது. கோவணம் கூட கட்டியது இல்லை. பதினாறிலிருந்து இருபத்து மூன்று வயது வரை கோவணம். வேலைக்குப் … Read more

கைக்குட்டையை வைத்து கல்லா கட்டுவது எப்படி?

இந்தத் தொடரின் அத்தியாயம் 26, ”மார்க்கி தெ ஸாத்: உடலும் ஆன்மாவும்” என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக இதை வாசிக்கவும். ஜப்பானிய இயக்குனர் அகிரா குரஸவா (1910 – 1998) உலகப் புகழ் பெற்றவர்.  ஆனால் குரஸவா அளவுக்குப் பிரபலமாகாத இன்னொரு ஜப்பானிய இயக்குனர் Nagisa Ōshima (1932 – 2013).  சென்ற கட்டுரையில் குறிப்பிட்ட உடல் மற்றும் ஆன்மா பற்றிய குறிப்புகளை நினைவு கூருங்கள்.  ஓஷிமாவின் சினிமாவுக்கு அடிப்படை, உடல்.  குரஸவாவின் படங்களில் வன்முறையும் போரும் பிரதானமாக … Read more

கல்லெறியும் கிழக் கூட்டம்…

முன்பெல்லாம் எனக்கு அடிக்கடி ஒரு மாதிரியான கடிதங்கள் வரும்.  பொதுவாக எனக்கு வரும் மின்னஞ்சல்களை அதிகாலையில் பார்க்கும் வழக்கமுடையவன் நான்.  இன்னும் நீ சாகவில்லையா?  இன்னுமா உயிரோடு இருக்கிறாய்?  சீக்கிரம் செத்துத் தொலையேன்.  உன்னை மாதிரி சமூக விரோதிகளுக்கெல்லாம் தண்டனையே கிடையாதா?  உன்னைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும்.  இப்படியாகப்பட்ட அஞ்சல்கள் அவை.  இதையெல்லாம் பார்த்து எனக்குள் ஒருவித கருணையுணர்வு சுரக்கும்.  உங்கள் காலணிக்குக் கீழே நீங்கள் அறியாமல் ஒரு பூரான் சிக்கித் துடிக்கும்போது ஒரு பரிதாப … Read more

சொன்னால் பலிக்கிறது!

பெண்கள்தான் இப்படிச் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.  நான் ஏதாவது சொன்னால் அது பலித்து விடுகிறது.  ஒரு பெண் அதிலும் தீவிரம்.  நீண்ட காலம் பார்த்திராத யாரையாவது பார்க்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றினால் அந்த நபர் செத்து விடுகிறார்.  இப்படி அவள் ஒன்பது பேரை பார்க்க நினைத்திருக்கிறாள்.  அவள் மீது என்ன தப்பு? அவளுக்கு மனதில் தோன்றுகிறது, அதற்கு அவள் என்ன செய்ய முடியும்? என்னிடம் பெண் தன்மை அதிகம் என்பதனாலோ என்னவோ நான் சொன்னாலும் பலித்து விடுகிறது.  … Read more