இரவு, தனிமை, மதுப் புட்டி… கூடவே இசை…

மதுப் புட்டி என்றதும் டாஸ்மாக் ஞாபகம் வரக் கூடாது.  உயர்தரமான ஃப்ரெஞ்ச் வைன் அல்லது அனிஸ் அல்லது ரெமி மார்ட்டின் அல்லது ஸ்காட்ச்…இப்படி உங்களுக்குப் பிடித்த மது பானத்தோடு இரவில் யாருமற்ற தனிமையில் இந்த பியானோவை கேட்டுப் பாருங்கள்.  இந்த அற்புதமான கலைஞரை எனக்கு அறிமுகப் படுத்திய வடிவேல் குமாருக்கு நன்றி.    இது பற்றி நிறைய எழுதத் தோன்றுகிறது.  நேரம் இல்லை.  எக்ஸைலின் ஒரே ஒரு அத்தியாயத்தை இரண்டு வாரங்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பியானோ … Read more

ரசித்துப் படித்த கட்டுரை

மிகுந்த ராணுவ ஒழுங்குடன் அமைந்திருந்த என் தினசரி வாழ்க்கை கடந்த ஒரு மாதமாக ஹிப்பிகளின் வாழ்வு போல் அமைந்து விட்டது.  தியானம் இல்லை.  வாரம் இரண்டு முறை அப்யங்கம் இல்லை.  வாரம் ஒரு முறை ரெமி மார்ட்டின் இல்லை.  கடிதங்களுக்கு பதில் எழுதவில்லை.  இரவில் முறையான நேரத்தில் உறங்கப் போவதில்லை.  உலகக் கால்பந்தாட்டம் காரணம் இல்லை.  மிகச் சில ஆட்டங்களையே பார்க்கிறேன்.  இந்த ஒழுங்கற்ற தினசரி வாழ்வுக்குக் காரணம், எக்ஸைல் தான்.  1600 பக்கங்களில் 1300 பக்கங்களை … Read more

எக்ஸிஸ்டென்ஷியல் ஃபுட்பால்

எதற்குமே அசையாமல் தொலைக்காட்சியே பார்க்கக் கூடாது என்று தீர்மானமாக இருந்த நான் உலகக் கால்பந்தாட்டப் போட்டிக்காக பார்க்க ஆரம்பித்து விட்டேன்.  தினமும் இரவு ஒன்பதரையிலிருந்து பதினொன்றரை வரை.  இரவு பத்துக்கு உறங்கி காலை நான்கு மணிக்கு எழுவதுதான் எனக்கு இயல்பாக இருக்கிறது.  இப்படி நள்ளிரவில் படுத்து காலை ஆறு மணிக்கு எழுந்தால் பிறகு நாள் பூராவும் ஏதோ கஞ்சா அடித்தது போல் கிறக்கமாக உள்ளது.  அதே ஆறு மணி நேரம்தான்.  ஆனால் தேக லயம் கெட்டு விடுகிறது.  … Read more