அடியேனைப் பற்றி : நாகூர் அப்துல் கையூம்

பின்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையில் என்னைப் பற்றி பெருமையாக ஒரு வார்த்தை இல்லை.  விமர்சனம், திட்டு, ஆதங்கம் போன்றவைகளே காணப்படுகின்றன.  ஆனால் நாகூர் பற்றி நான் எழுதியதை இவ்வளவு பிரமாதமாக யாருமே தொகுத்ததில்லை.  எனக்கே நான் நாகூர் பற்றி இவ்வளவு எழுதியிருக்கிறேனா என்று ஆச்சரியமாக இருந்தது.  இந்தக் கட்டுரையை நீங்கள் பொறுமையாகப் படித்தால் அது புதிய எக்ஸைலுக்குள் நுழைவதற்கான ஒரு தயாரிப்பைத் தரும்.  அபாரமான கட்டுரை.  திட்டுவது பற்றிக் கவலைப்படவில்லை.  அது கையூமின் உரிமை.  என்னிடமே இல்லாத … Read more

ஊர் கூடித் தேர் இழுப்போம்!

  சில எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களில் மட்டுமே கையெழுத்திடுவார்கள்.  ஆனால் நான் அப்படி எந்த நிபந்தனையும் வைத்துக் கொண்டதில்லை.  பலருக்கும் டயரி, நோட்டுப் புத்தகம், துண்டுச் சீட்டு என்று எதையும் பார்க்காமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறேன்.   இனிமேல் அப்படிச் செய்வதாக இல்லை.  ஒரு கையெழுத்துக்கு 5000 ரூ.  கொடுத்தால் மட்டுமே கையெழுத்து.  இதை நான் சேத்தன் பகத்திடமிருந்தே தெரிந்து கொண்டேன்.  அவருடைய புத்தகம் இரண்டே வாரத்தில் 20 லட்சம் விற்றிருக்கிறது.  ராயல்டி நாலு கோடி கிடைக்கும்.  … Read more

இசையின் இருப்பிடம் எது?

அந்திமழையில் வெளிவந்து கொண்டிருக்கும் என் கேள்வி பதில் பகுதி நல்ல பல கேள்விகளால் என் மனதுக்குப் பிரியமான ஒரு பகுதியாக ஆகிக் கொண்டிருக்கிறது.  இதேபோல் இந்தப் பகுதியில் இன்னும் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரியப்படுகிறேன்… http://andhimazhai.com/news/view/charu15.html

புதிய எக்ஸைல் : நேசமித்ரன் வாழ்த்து

முகநூலில் எழுதுபவர்களின் தமிழைப் பார்க்கும் போதெல்லாம்  நான் துக்கம் கொள்வதுண்டு.  தமிழ் இனி செத்துப் போகும் என்று நண்பர்களிடம் புலம்புவதுண்டு.  ஆனாலும் பாரதியும், மௌனியும், நகுலனும், தர்மு சிவராமுவும் கொடுத்த பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சமகாலத் தமிழ் எழுத்தை நான் அதிகம் வாசிப்பதில்லை.  வாசிக்க விரும்புவதும் இல்லை.  நான் தமிழில் எழுதினாலும் இந்திய ஆங்கில எழுத்தாளர்களுக்கு மத்தியில் சென்று விடவே விரும்புகிறேன்.  ஓரளவு அந்த முயற்சியில் வெற்றியும் கிட்டி விட்டது.  ராஸ லீலா … Read more

ருத்ரய்யா நினைவுக் கூட்டம்

இயக்குனர் ருத்ரைய்யா நினைவுக் கூட்டம்… 30-11-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. புக் பாய்ன்ட் அரங்கம், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை, சென்னை.   நினைவைப் பகிர்ந்துக் கொள்பவர்கள்: வேங்கடபதி (முன்னாள் மத்திய அமைச்சர்) கோபண்ணா (காங்கிரஸ்) சந்திரசேகர் டாக்டர் காந்தராஜ் நக்கீரன் கோபால் கங்கை அமரன் ராஜேஷ் கே. ராஜேஷ்வர் ஞானசேகரன் அருண்மொழி அரவிந்தன் ராசி அழகப்பன் ஞாநி ட்ராட்ஸ்கி மருது வண்ணநிலவன் B.லெனின் D.I. அரவிந்தன் (தமிழ் ஹிந்து) கே.ஆர் வீ. சேகர் … Read more