(3) புதிய எக்ஸைல் : டாக்டர் ஸ்ரீராம் வாழ்த்து

ஹாய் சாரு,  புதிய எக்ஸைலின் ஒரு பக்கத்தை தமிழ் இந்துவில் படித்தேன். “எத்தனையோ ஜீவராசிகளைக் கொன்று தின்றிருக்கிறேன். ஆனால் அந்த ஃப்ளோரானின் மரணச் சம்பவம் என்னை ரொம்பவும் அலைக்கழித்தது. உயிர் உடலை விட்டுப் பிரிவதற்குப் பதினைந்து நாட்களா ஆகும்? ஒவ்வொரு நாளும் பெருந்தேவி அதன் அருகே சென்று ஏதோ பேசுவாள்.” இந்தப் பத்தியைப் படித்த பொழுது தானாக கண்ணீர் வந்து விட்டது. ‘Life of Pi’ படத்தில் பை புலியை மன்னிக்கும் தருணமும், அப்பொழுது புலியின் கண்களில் தெரியும் … Read more

ஒரு நாவல் ஒரு லட்சம் பிரதிகள்…

பின்வரும் இணைப்பில் புதிய எக்ஸைல் முன்வெளியீட்டுத் திட்டம் பற்றி வெளிவந்த சத்யம் தொலைக்காட்சி செய்தியைக் காணலாம். https://www.youtube.com/watch?v=QytbhYLnMcE&feature=youtu.be     e

ஒரு நாவல் ஒரு ரூபாய்!!!

நண்பர்களும் நம் இலக்கியச் சூழலும் புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டத்தின் தனித்தன்மையைப் புரிந்து கொண்டார்களா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.  ஆங்கிலத்தில் மட்டுமே புத்தகங்களுக்கு  இப்படி முன்பதிவுத் திட்டம் இருந்து வருகிறது.  தமிழிலும் இருக்கிறது என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள்.  அதெல்லாம் 500 ரூ புத்தகம் 400 ரூ.க்குக் கிடைக்கும் முன்பதிவு.  உண்மையான அர்த்தத்தில் அதற்குப் பெயர் முன் பதிவுத் திட்டம் அல்ல.  அது சலுகை விலை.  நீங்கள் கவனித்திருக்கலாம்.  செய்தித்தாள்களில் சில நேரங்களில் முழு பக்க … Read more

(2) புதிய எக்ஸைல் : கவிஞர் குமரகுருபரன் வாழ்த்து

புதிய எக்ஸைலின் சில பகுதிகளை இன்றைய தமிழ் இந்து நாளேட்டில் படித்தேன்.அப்படி ஒரு ரம்யமான மொழி சாரு.அட்டகாசம் 🙂 குமரகுருபரன். இன்று காலை தமிழ் இந்து நாளிதழில் புதிய எக்ஸைலின் ஒரு பகுதி வெளிவந்துள்ளது.  புதிய எக்ஸைல் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு மாதிரியாக அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.  தமிழ் இந்து நாளிதழுக்கு என் மனமார்ந்த நன்றி.

புதிய எக்ஸைல் பற்றிய செய்தி

  புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டம் பற்றியும், புதிய எக்ஸைல் பற்றியும் என்னுடைய செய்தி ஒன்று இன்றைய சத்யம் தொலைக்காட்சியின் காலை ஏழரை மணி செய்தியிலும் பிறகு இன்று முழுவதும் இடம் பெறும் செய்திகளிலும் வெளிவர இருக்கிறது.