நேரில் சந்திக்கலாமா?

அன்புள்ள சாரு, வணக்கம். எக்ஸைல் 2  வெளியீடு குறித்தும், தங்களது உடல் நலமடைந்து வருவது  குறித்தும் மகிழ்ச்சியாக உள்ளது. எக்ஸைல் 2 புத்தகம் வெளியிடும் நாள் பற்றித்  தாங்கள் பதிவிட்டதில்  இருந்து கொண்டாட்ட மனநிலையில் தான் இருக்கிறேன். எப்பொழுதும் எக்ஸைல் 2 புத்தகத்தின் நினைப்பாகவே உள்ளது. எந்த அளவிற்கு அதன் தாக்கம் இருக்கிறது என்றால், நேற்று வகுப்பில் ஜனவரி மாதத்தில்  ஒற்றுமை உணர்வின் அடிப்படையில் கொண்டாட இருக்கும் நிகழ்ச்சி எது என்ற ஆசிரியரின் கேள்விக்கு எக்ஸைல் 2 … Read more

தமிழ் ஸ்டுடியோ ஆண்டு விழா

நண்பர்களே, எதிர்வரும் 23 ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோவிற்கு ஏழாவது பிறந்த நாள். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி சாதாரண குறும்பட/ஆவணப்பட இணையதளமாக தொடங்கப்பட்ட தமிழ் ஸ்டுடியோ 2010ஆம் ஆண்டு, தமிழின் நல்ல சினிமாவை முன்னெடுக்கும் இயக்கமாக உருமாறியது. தமிழ் ஸ்டுடியோவின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவை எதிர்வரும் 23ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் அரங்கில் கொண்டாடவிருக்கிறோம். அன்று என்னுடைய முதல் புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெறவிருக்கிறது. நாடு கடந்த கலை என்கிற … Read more

ரஜினி பற்றி அராத்து

(கொடுமையான எழுத்துப் பிழைகளை நான் சரி செய்யவில்லை.  கேட்டால் எல்லாருமே இப்படித்தான் எழுதுகிறான் என்கிறார்! எப்படியோ போங்க!) ரஜினியும் சிகரட்டும் சென்னையில் இருப்பது கடும் நரகம்தான்.பட்டை வெயில் , கடல் வேறு இருப்பதால் வேர்த்து ஊற்றிக்கொண்டேயிருக்கும். பொண டிராஃபிக் , பொல்யூஷன் , மக்கள் கூட்டம் & குப்பை கூளம்.அதனால் எல்லோரும் கடு கடுவென எரிச்சலோடுதான் திரிந்து கொண்டிருப்பார்கள்.ஏசி இல்லாத வீடுகளில் புணர்ச்சி கூட திட்டிக்கொண்டே எரிச்சலோடுதான் நடக்கும். இந்த மாதிரி சூழ்நிலையில் , சினிமா ஸ்டாரக்ள் … Read more

.பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறேன் சாரு…

என்னுடைய வாசகர்களில் 90 சதவிகிதம் பேர் மாணவர்கள் தான்.  சில தினங்கள் முன்பு கணேஷ் அன்புவுடன் பெலிட்டா உணவகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தந்தையின் வயது 58 என்று சொன்னார்.  ஓ, என் வயதை விட மூன்று வயது சின்னவரின் மகன் என் நண்பர்.  என்னை இவர்கள் அனைவரும் சாரு என்று பெயர் சொல்லியே அழைக்கின்றனர்.  இதைப் பற்றியெல்லாமா பீற்றிக் கொண்டிருப்பது, செய்வதற்கு எத்தனையோ உருப்படியான வேலைகள் இருக்கின்றன என்று நினைப்பேன்.  இப்போதுதான் இதையெல்லாம் … Read more

கோவை சந்திப்பு

வரும் வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து ஞாயிறு மதியம் வரை கோவையில் இருப்பேன். ஜனவரி 5-ஆம் தேதி எக்ஸைல் வெளியீட்டு விழா பற்றி நண்பர்களை சந்திக்க விரும்புகிறேன். விருப்பமுள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். என்னுடைய பழைய ஃபோன் வேலை செய்யவில்லை. எனவே அந்த எண்கள் எதுவும் என்னிடம் இல்லை. எனவே கோவை நண்பர்கள் என்னை அவர்களாகத்  தொடர்பு கொண்டால் தான் உண்டு. charu.nivedita.india@gmail.com

அப்படியானால் நாங்கள் நடத்துவது எழவு விழாவா?

இன்று காலையில் ஜெயமோகன் ப்ளாகில் ஜடாயு என்பவர் ஸ்வராஜ்யா பத்திரிகையில் எழுதியிருந்ததை எடுத்துப் போட்டிருப்பதைப் படித்ததும் என் சாவுக்கு தமிழ் இலக்கிய உலகில் நிலவும் பொய்யும் பித்தலாட்டமும்தான் காரணம் என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கி விடலாம் என்று நினைத்தேன்.  ஆனாலும் மரணத்தையும் தற்கொலை உணர்வையும் மன உளைச்சலையும் சந்தோஷத்தையும் மற்ற எல்லா எழவையும் கூட எழுத்தின் மூலமாக மட்டுமே நான் கடந்து கொண்டிருப்பதால் அந்தத் தற்கொலை முடிவை ரத்து செய்து … Read more