கொண்டாட்டம்

நான் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை என்றாலும் டிசம்பர் 18-ஆம் தேதியை நண்பர்களுடன் வெளியூரில் கொண்டாடுவது வழக்கம்.  அது என் பிறந்த நாள்.  இந்த முறை ஸ்ரீலங்கா அல்லது லங்காவி செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தேன்.  ஆனால் அவந்திகா ஈடுபட்டு வரும் Eck என்ற ஆன்மீக அமைப்பின் ஆண்டு விழா டிசம்பரில் ஹைதராபாதில் நடக்க உள்ளது.  அவந்திகா அதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பதால் டிசம்பர் மாதம் மட்டும் வெளியூர் செல்லாதே என்று என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.  கடந்த 20 … Read more

எக்ஸைல் வெளியீட்டு விழா : காமராஜ் அரங்கம் : Chief Guest

எக்ஸைல் வெளியீட்டு விழாவுக்கு யாரை அழைப்பது என்று குழப்பமாக இருந்தது.  நடிகர்களில் படிக்கக் கூடியவர் ஒரே ஒருவர்.  அவர் என்னை எதிரியாக நினைப்பவர்.  நடிகை பற்றிய பேச்சே இல்லை.  யாருக்கும் தமிழே தெரியாது.  பிரபலங்களை அழைக்கலாம் என்றால் என் பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடுகிறார்கள்.  இருக்கும் இரண்டொருவரையும் என் ஒவ்வொரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியிலும் அழைத்தாகி விட்டது.  அவர்களையே திரும்பத் திரும்ப அழைக்க முடியாது.  வாலியும் போய் விட்டார். தருண் தேஜ்பாலை அழைக்கலாம் என்றார் அராத்து. … Read more

ஒரு சந்தோஷமான கடிதம்…

அன்புள்ள சாருவுக்கு, அன்புள்ள சாரு, தாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மூன்று  தினங்களுக்குப் பின்பே அறிந்தேன். நிஜமாக பெங்களூரிலிருந்து சென்னை வந்து பார்க்கவே தீர்மானித்திருந்தேன். அடுத்த நாள்  என் மகன் உடல் நலமின்றி ICUவில் சேர்க்கப்பட்டிருந்தான். ஒரு வாரம் கழித்தே discharge செய்யப்பட்டான். இருப்பினும் நிறைய நண்பர்கள் உங்களை நன்கு கவனித்துக்கொண்டதை தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன். தாங்கள் நலமாக வீடு வந்து சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களது அந்திமழை கேள்வி பதிலில் தாங்கள் “Atlas shrugged” … Read more

ஜனவரி 5 : காமராஜர் அரங்கம் : உங்கள் விழா

முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.  ஜனவரி 5 திங்கள் கிழமை.  அதிலும் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து அலுவலகம் தொடங்கும் முதல் நாள்.  ஆனால் எனக்கு வேறு வழியே இல்லை.  ம்யூஸியம் தியேட்டரில் வைத்தால் நூறு பேர் நிற்க வேண்டியிருக்கும். அதை நான் விரும்ப மாட்டேன்.  ஆயிரம் பேர் திரும்பி்ப் போக வேண்டியிருக்கும்.  அதுவும் சரியில்லை.  ஒரு 2000 பேராவது வந்து அமர்ந்து பார்க்கும் வகையில் உள்ள அரங்கம் தான் தேவை.  அப்படிப்பட்ட அரங்கம் காமராஜர் அரங்கம்தான்.  டிசம்பர், … Read more

புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக : அராத்து

பின் வருவது அராத்து  தன் முகநூலில் எழுதியது: வெண்முரசு விழாவைப்பற்றி ஏதும் எழுதவில்லையே நீங்கள் என ஜெயமோகன் போனில் கேட்டுவிட்டதால் இந்த பதிவு. புத்தகத்துக்கு ஏன் மார்கெட்டிங்க் என இன்னமும் கொந்தளித்துக்கொண்டு இருக்கும் ஒன்றரை லூஸுக்களுக்கு இதற்கு மேலும் பதில் சொல்லாமல், மார்கெட்டிங்கை இதை விட நூறு மடங்கு முன்னணி எழுத்தாளர்கள் செய்தாக வேண்டும். பதிப்பகமும் விளம்பரங்கள் செய்ய வேண்டும் , விழாக்கள் எடுக்க வேண்டும் எனினும் , செலவு என வந்து விட்டால் பதிப்பகங்கள் இன்னமும் … Read more