சாருநிவேதிதாவின் ''புதிய எக்ஸைல்'' – நுண்ணுணர்வின் அழகியலும் அபத்தமும் : கார்ல் மார்க்ஸ்

எக்ஸைல் பற்றி யாரும் எதுவும் எழுதாத நிலையில் கார்ல் மார்க்ஸ் பின்வரும் மதிப்புரையை அவரது முகநூலில் எழுதியிருக்கிறார். பின்னர் அது குறித்து நிர்மல் சிறிது விவாதித்திருக்கிறார்.  மற்ற யாரும் விவாதத்தில் பங்கு பெறவில்லை.  அருணாசலம், செல்வகுமார், அராத்து, கணேஷ் அன்பு, பிச்சைக்காரன், ராஜேஷ் போன்ற நண்பர்கள் விவாதத்தில் பங்கு பெற்றிருக்கலாம்.  எப்படிப்பட்ட மொக்கை, மரண மொக்கைப் படத்துக்கெல்லாம் மாய்ந்து மாய்ந்து விமர்சனம் எழுதி சண்டை போடுபவர்கள் நாவல் என்றால் பம்மி விடுகிறார்கள். கார்ல் மார்க்ஸுக்கு என் பிரத்தியேக … Read more

கேள்வி பதில்

கேள்வி: ஜெயகாந்தன் பற்றிய சன் டிவி கலந்துரையாடலில் நீங்கள் கலந்து கொண்டு பேசியதைக் கேட்டேன்.  அவரைப் பற்றிய உங்கள் கருத்தை ஒரு கட்டுரையாக எழுத முடியுமா? டாக்டர் ஸ்ரீராம், சென்னை. பதில்:  ஸ்ரீராம், நாலைந்து நாட்களாக நான் இந்த ஜெயகாந்தன் விஷயமாகத்தான் அலைந்து கொண்டிருக்கிறேன்.  சன் டிவி நிகழ்ச்சியில் என் நண்பர் சொன்னதிலிருந்துதான் எனக்கு அந்த ஜானோதயம் ஏற்பட்டது.  ஆஹா, ஜெயகாந்தன் விலிம்பு நிலை மக்களைப் பற்றி எழுதியிருக்கிறாரே, அது ஏன் என்னுடைய மந்த புத்திக்கு உறைக்கவில்லை … Read more

ஜெயலலிதா விடுதலை : கா. மார்க்ஸ்

முகநூலில் கார்ல் மார்க்ஸ் எழுதிய இதையே என் கருத்தாகவும் கொள்ளவும்.  அப்புறம் டிசம்பரில் என் புத்தக வெளியீட்டில் வந்து ஜெயலலிதா விடுதலை பற்றி சாரு எதுவும் சொல்லவில்லை, பயப்படுகிறாரா என்று புகார் சொல்லக் கூடாது.  இனி கார்ல் மார்க்ஸ்: கடந்த முறை ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட போது ”இந்த தண்டனைக்கு முற்றிலும் தகுதியானவர் ஜெயலலிதா” என்று சொல்லியிருந்தேன். எந்த டிவியில் என்று கேட்காதீர்கள். இதே முகனூலில்தான். இப்போது இந்த விடுதலைக்கும் அவர் முற்றிலும் … Read more

புதிய எக்ஸைல் வெளியீட்டு விழா காணொளி

டியர் சாரு… மிக மிக மிக மிக தாமதமான பணி இது. முதல் விஷயம் வேலையும் கொஞ்சம் டைட். இரண்டாவது விஷயம் , வேகம் குறைவான datacard இண்டெர்நெட் கனெக்‌ஷன். file size அதிகம் என்பதால் upload ஆக மணிக்கணக்கில் எடுத்துக்கொண்டது. சில நேரங்களில் hang ஆகி அப்படியே நின்றும் விட்டது. செல்வா  அலுவலகத்தில்  முயற்சித்தும் பயன் இல்லை. நேற்றுதான் அதிவிரைவு ப்ராட்பேண்ட் கனெக்‌ஷன் புதியதாக எடுத்தேன்.  இன்று அப்லோட் செய்து விட்டேன். இரண்டு மாத தாமதத்திற்கான … Read more

அன்பின் பிரார்த்தனை (2)

அன்புள்ள சாரு, சாரு ஆன்லைனில் ”அன்பின் பிரார்த்தனை” படித்தேன். பதறிவிட்டேன் என்று தான் சொல்லவேண்டும். இன்னும் நடுக்கம் குறையவில்லை எனக்கு. அடிப்படையில் வெறுப்பிற்கு எதிரான எதிர்வினையாகத்தான் அதை எழுதினேன். மிகவும் சாதாரண நெகிழ்ச்சிக் கட்டுரை ஒன்றில் ‘உங்களை எனக்கு அவ்வளவாக பிடிக்காது’ என்று ஜெமோவுக்கு ரியாஸ் அஹமது சொல்லியிருந்ததை ”இன்று இந்த மனநிலையை கணிசமான இஸ்லாமியரிடம் காணமுடிகிறது” என்று அதை வெறுப்பு மனநிலையாக மாற்றியிருந்தார். இதற்கு பதில் சொல்லும் முகமாக ”நான் அடிப்படைவாதத்துக்கு எதிராக எழுதக்கூடியவன்” என்றெல்லாம் ரியாஸ் பதில் சொல்லியிருந்தார். … Read more