Pithy thoughts – 3

நூற்றாண்டுகளாய் நின்று கொண்டிருக்கிறேன் தனிமையும் சோர்வும் அயர்ச்சியும் விரக்தியும் கொண்டு. மழை கண்டேன் புயல் கண்டேன் அக்னியும் சுட்டெரித்தது சர்ப்பங்கள் ஊர்ந்து நெளிகின்றன நாய்கள் சிறுநீர் கழிக்கின்றன கல் கண்ணீர் விடுகிறதென வணங்க ஆரம்பித்ததொரு கூட்டம் கற்கள் மீது விரோதங் கொண்டவர்கள் மூளியாக்கினர் என்னை ஆனால் வர வேண்டியவனை இன்னும் காணோம்…

Pithy thoughts – 2

அகங்காரமே என் சிருஷ்டியாக வெளிப்படுகிறது. அதற்கான அவியே அடக்கமும் மதுரமும். *** நிச்சலனமாக இருக்கிறது ஏரி சரேலென இறங்கியவொரு தனித்த பறவை மீனொன்றைக் கவ்விச்செல்கிறது படபடக்கிறது மனம்

ஷார்லட் தமிழ்ச் சங்க சந்திப்பு

ஸூம் மூலமாக வடக்கு கேரலினா மாநிலத்தில் உள்ள ஷார்லட் நகரத் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணக்கும் வாசகர் சந்திப்பில் பேச இருக்கிறேன். அறிமுக உரை ஐந்து நிமிடம் இருக்கும். அடுத்து என்னுடைய உரை ஒரு மணி நேரம். கொண்டதும் கொடுத்ததும் என்பது தலைப்பு. அதைத் தொடர்ந்து அரை மணி நேரம் கலந்துரையாடல். இந்திய நேரம் இரவு ஒன்பது மணி. வரும் ஞாயிற்றுக் கிழமை. 8.11.2020. அமெரிக்க நேரம் 10.30 AM EST. 300 பேர் வரை கலந்து கொள்ளலாம் … Read more

Pithy thoughts – 1

என் எழுத்தைப் படித்தால் என்னை வெறுக்கவே தோன்றும். என்னை அனுபவிப்பவர்களால் மட்டுமே என்னைப் புரிந்து கொள்ள முடியும். நான் உங்களிடம் ஒரு குழந்தை தன் அன்னையிடம் பேசுவது போலவே பேசுகிறேன். அதனாலேதான் என் எழுத்தில் எந்தத் தணிக்கையும் இல்லை. அதனாலேதான் என்னால் சக ஜீவராசிகளுக்கு அன்னையாகவும் இருக்க முடிகிறது. அதனாலேதான் எந்தக் கூச்சமுமின்றி என் குழந்தைகளுக்கு உணவு அனுப்புங்கள் என்று கேட்கவும் முடிகிறது. ***

ராஸ லீலா கலெக்டிபிள்

இன்னும் சிலநண்பர்களுக்கு ராஸ லீலா கலெக்டிபிள் அனுப்பப்பட வேண்டியிருக்கிறது. கொரோனா காரணாகத் தாமதம் ஏற்பட்டது. பின்வரும் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் நலம். சண்முகவேலு (கோவை) வினோபன் விக்ரம் காந்தி மற்ற அமெரிக்கவாழ் நண்பர்களுக்கு நூலை எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை. போக்குவரத்து சீரானால் யார் மூலமாகவாவது கொடுத்தனுப்ப இயலும்.