அன்புள்ள சேனனுக்கு…

அன்புள்ள சேனனுக்கு, நான் மொழிபெயர்த்த ஊரின் மிக அழகான பெண் என்ற சிறுகதைத் தொகுப்பை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது. நீங்கள் லண்டனில் இருப்பதால் அநேகமாக வாசித்திருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் கிண்டிலில் கிடைக்கிறது. வாசித்துப் பாருங்கள். அந்தத் தொகுதியில் லெபனிய எழுத்தாளர் காதா ஸம்மான் (Ghada Samman) எழுதிய பெய்ரூட் கொடுங்கனவுகள் என்ற நாவலிலிருந்து சில பகுதிகளை மொழிபெயர்த்திருக்கிறேன். சனிக்கிழமை நடக்க இருக்கும் உங்கள் நாவல் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் பற்றி … Read more

படித்ததில் பிடித்தது…

நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா, மோடியே வருவாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அரசியலில் எனக்கு ஆர்வம் போய் விட்டது. மக்களின் தகுதிக்கு ஏற்பவே தலைவர்கள் வருவார்கள் என்ற விரக்தி உணர்வே காரணம். ஆனாலும் ராகுலின் இந்தத் தன்மை எனக்குப் பிடித்திருக்கிறது. நாளை பிரதம மந்திரி நாற்காலில் இவர் அமர நேர்ந்தால் இவரை இப்படி இருக்க விட மாட்டார்கள். ஆனாலும் மனோபாவத்தை எத்தனை பதவி வந்தாலும் மாற்ற முடியாது. இவரைப் போன்ற ஒருவரே தலைவராக வர வேண்டும். தகுதி … Read more

கள நிலவரம்

முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலை நேற்று புத்தக விழா திறந்த முதல் நாளே பலர் வந்து கேட்டு விட்டுப் போனதாகக் கேள்விப்பட்டேன். இதோ இன்னும் சிறிது நேரத்தில் பிரதிகள் அச்சகத்திலிருந்து வந்து விடும் என்பது தற்போதைய செய்தி. தற்போது என்றால், 25 ஃபெப்ருவரி 2021 காலை பத்தேகால். இந்த நேரத்திலேயே போன் போட்டு புத்தகம் வந்து விட்டதா என்று டார்ச்சர் கொடுக்கக் கூடாது என்பதால் பதினோரு மணிக்குக் கேட்கலாம் என்று இருக்கிறேன். பதினோரு மணிக்கு அடுத்த செய்தியைத் தருகிறேன். … Read more

பா. ராகவன் அடியேனுக்குத் தர வேண்டிய ஆயிரம் ரூபாய்!

குமுதத்துக்கு இன்று மதியம் பன்னிரண்டு மணிக்குள் கட்டுரை போய்ச் சேர்ந்தாக வேண்டும். இன்று மாலைக்குள் எக்ஸைல் பிழை திருத்தம் முடித்துக் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன்.  900 பக்கத்தில் 300 பக்கம் முடித்திருக்கிறேன்.  அத்தனையையும் விட்டு விட்டு இதை எழுதிக் கொண்டிருப்பதற்குக் காரணம், பா. ராகவனின் யதி நாவல்.  இன்று காலை நாலு மணிக்கு அதைக் கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  கிட்டத்தட்ட ரெண்டு வருஷமாக அதைப் படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்று மேஜையிலேயே வைத்திருக்கிறேன்.  … Read more