கால சுப்ரமணியனின் லயம்
சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஸ்ரீராமுடன் திருநெல்வேலி சென்றிருந்தேன். இலக்கியவாதிகள் நிறைந்த ஊர். ஆனால் அவர்கள் யாருக்கும் என்னைப் பிடிக்காது. எனக்கும் அப்படியே. நான் சென்றிருந்தது ஒரு அம்மனை தரிசிக்க. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அத்தனை பிரபலம் அடையாத அம்மன். முஸ்லிம் பெண்கள்தான் அதிகம் காணப்படுவார்கள். கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கை. நான் இரண்டு முறை சென்றிருக்கிறேன். கேட்டது கிடைத்தது. ஆனால் நான் கேட்பதும் கொடுப்பது மாதிரி சின்னதாகத்தான் கேட்பேன். நோபல் பரிசு வேண்டும் என்றெல்லாம் பேராசையாகக் கேட்பதில்லை. … Read more