தள்ளுபடி விலையில் என் புத்தகங்கள்…
20 சதவிகிதத் தள்ளுபடியில் என் புத்தகங்கள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் கிடைக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள்…
20 சதவிகிதத் தள்ளுபடியில் என் புத்தகங்கள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் கிடைக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள்…
ஒரு இளைஞனின் கடிதம் வந்தது. பதினாறு வயதிலிருந்து உங்களைப் படிக்கிறேன். இப்போது வயது இருபத்து மூன்று. பதின்பருவத்தில் உங்களுக்கு நீண்டதொரு கடிதம் எழுதினேன். ஆனால் அனுப்பவில்லை. அனுப்பினால் திட்டுவீர்கள் என்று கேள்விப்பட்டு பயந்து அனுப்பாமல் இருந்து விட்டேன். இப்படி நீண்டது அந்த ஆங்கிலக் கடிதம். இதுதான் சாரம். ரொம்பவும் மனதைத் தொட்டதால் “ஒருநாள் ப்ரூ ரூம் பக்கம் வாருங்களேன், சாப்பிடுவோம்” என்று பதில் எழுதினேன். உங்களோடு சாப்பிட்டால் செத்துடுவேன் சாரு. ஐயோ, ஏன், நான் ஒன்றும் விஷமெல்லாம் … Read more
எஸ்.ரா.வின் பேட்டி ஒன்றைப் பற்றி பலரும் சிலாகித்து எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். முகநூலிலும் பார்த்தேன். எல்லோருமே அதில் கொண்டாடும் குறிப்பிட்ட விஷயம், அதில் உள்ள நேர்மறையான எண்ண அதிர்வுகள். உதாரணமாக, எஸ்.ரா.வுக்கு வாசகர் ஒருவரின் போஸ்ட் கார்ட் போகிறது. என்னடா எழுதுறே, உன் கை காலை வாங்குவேன். அந்தக் கார்டில் வாசகரின் விலாசமும் இருப்பதால் அவர் வீட்டுக்கே போகிறார் எஸ்.ரா. அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். அந்த வாசகர் எஸ்.ரா.வுக்குத் தேநீர் … Read more
வாசகர் வட்ட சந்திப்பு நடத்தி இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. சீனியின் புத்தக வெளியீட்டு விழாவில் கூடினால் அது வா.வ. சந்திப்பு. அப்படி இறுதியாக உத்தண்டியில் கூடினோம். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாகக் கூடவில்லை. கொரோனா போனால் மாமல்லபுரத்தில் சந்திக்கலாம். ஆனால் அதற்கு முன்னதாக சில திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்கு முதல் அடியாக சீனி என் பேச்சைக் கேட்க வேண்டும். லௌகீகமாக நான் ஒரு பூஜ்யம் என்பதால் சீனியும் சரி, காயத்ரியும் சரி, நான் என்ன … Read more
அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு, நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன். ஒரு பக்கம், கல்லூரிக்கு சென்று தத்துவம் பயில வேண்டும் என்ற ஆசை. இன்னொரு பக்கம் திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை. எதைத் தேர்ந்தெடுப்பது என்று புரியவில்லை. நீங்கள் வழி காட்டுவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் வாசகன், சுரேஷ் டியர் சுரேஷ், உங்கள் பொருளாதாரப் பின்னணி தெரியாது. திரைப்படத் துறையில் முன்னணியில் வந்தவர்களிடம் கோடிக் கணக்கில் சொத்து இருக்கிறது. அவர்களின் புதல்வர்கள் திரைப்படத் துறையிலேயே … Read more
ஊரின் மிக அழகான பெண் என்ற என்னுடைய மொழிபெயர்ப்புத் தொகுதி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதில் எகிப்தைச் சேர்ந்த ராத்வா அஷூரின் க்ரானடா என்ற புகழ்பெற்ற நாவலின் ஒரு பகுதியை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருந்தேன். மொழிபெயர்ப்பு வெளிவந்து இருபது ஆண்டுகள் இருக்கலாம். சரியாக நினைவில்லை. அரபி இலக்கியத்தில் நான் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் நண்பர்கள் அறிந்திருக்கலாம். நான் மொழிபெயர்த்த க்ரானடா நாவலின் பகுதியையும் ராத்வா அஷூர் பற்றி நான் எழுதியிருந்த குறிப்பையும் இங்கே மீண்டும் … Read more