என்னைச் சந்திக்க ப்ரூ ரூமுக்கு வருவாரா த்ரிஷா?

இந்தியாவிலேயே ரொம்பக் கட்டுப்பெட்டி சமூகம் தமிழ்நாடுதான்.  இன்று காலை ஃபாத்திமா பாபுவிடமிருந்து ஒரு வாட்ஸப் செய்தி.  தெரிந்த செய்திதான் என்றாலும் குஷ்வந்த் சிங் சம்பந்தப்பட்டது என்றால் திரும்பத் திரும்ப படிக்கலாம்.  குஷ்வந்த் இல்லஸ்ட்ரேடட வீக்லியின் ஆசிரியராக இருந்த காலம்.  அவருக்கு ஒரு போன் வருகிறது.  நான் நர்கீஸ் தத் பேசுகிறேன். எந்த நர்கீஸ் தத்?  சினிமா நடிகை? ஆமாம். யார்?  மதர் இண்டியா… ஆமாம்.  ஆமாம்.  எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும்.  வரலாமா? வாருங்கள். அரை மணி … Read more

சிறுகதை நேரம்: இன்றைய வாசிப்புக்கான லிங்க்

சற்று முன்னர் எழுதிய குறிப்பில் சில மாற்றங்கள். ஒலிச் சித்திரம் என்பது சினிமாவை வானொலியில் கொடுக்கும்போது சொல்லப்படும் வார்த்தை. நான் சொல்ல நினைத்தது வானொலி நாடகங்கள். ஒலிச் சித்திரம் அல்ல. இன்னொரு முக்கிய விஷயம். என்னை, குழந்தை மாதிரி என்று முதலில் சொன்னவரே ஃபாத்திமா பாபுதான். பாருங்கள், நெருங்கிய நண்பர்கள் என்றால் மறந்து விடுகிறது. உமாவுக்கும் மீராவுக்கும் முன்பே சொல்லி விட்டார். இன்றைய கதை: கோடம்பாக்கம். லிங்க்: https://www.clubhouse.com/club/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE

சிறுகதை நேரம்

ஆதியிலே சப்தம் இருந்தது.  நான் அந்த சப்தத்தின் அடிமை.  சிலர் நாத பிரம்மம் என்கிறார்கள்.  ஓம் என்ற ஒலி ஒரு குறியீடு.  இஸ்தாம்பூலில் உள்ள நீல மசூதியின் பாங்கு உலகின் தலைசிறந்த பாங்குகளில் ஒன்று எனப் படித்ததும் உடனடியாகக் கிளம்பி இஸ்தாம்பூல் சென்றேன்.  தஞ்சாவூர்க் காவிரி தன் மைந்தர்களுக்குக் கொடுத்த கொடையே காவிரியின் மைந்தர்கள் தம் வாழ்நாள் பூராவும் சப்தத்தின் அடிமையாகவும் சப்தத்தின் உபாசகராகவும் வாழுமாறு மாற்றுவதுதான்.  நாதத்தின் ஒரு வடிவமே கதையை வாசிக்கக் கேட்பது.  இன்றைய … Read more