கொண்டாட்டம்: வளன் அரசு

புலம்பெயர்ந்து வாழ்வதில் இருக்கும் மிகப்பெரிய நன்மை நம் சொந்த தேசத்தைக் குறித்து நன்றாகத் தெரிந்து கொள்ள முடியும் என்பதுதான். அந்த வகையில் நம் சமூகம் எவ்வளவு கீழ்மையாக இருக்கிறது என்பதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். இதை வெளியே சொன்னால் நம்மை ஏதோ தீவிரவாதியைப் போல நடத்துகிறார்கள். அன்பின் பெயரால் நடக்கும் வன்முறையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உண்மையான அன்பு என்பது என்ன தெரியுமா? சாம்பார் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சாப்பிடும் ஆர்வத்தில் உங்கள் சட்டையில் … Read more

கிழட்டுத்தனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனோடு இன்று நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குப் போயிருந்தேன்.  பூங்காவில் பெருங்கூட்டம்.  இனிமேல் போக மாட்டேன்.  எம்மார்சி நகர் பெங்களூர் மாதிரி இருக்கிறது.  திரும்பின இடமெல்லாம் பூங்கா.  பூங்காவில் ஆட்களே இல்லை.  பெரிய பெரிய சாலைகள்.  சாலைகளிலும் ஆட்கள் இல்லை.  ராகவன் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். இரண்டு தினங்களுக்கு முன்பு நாங்கள் வேலை பார்த்த அஞ்சலகத் தலைமையகத்துக்குச் சென்றிருந்தாராம்.  அவரைப் பார்த்த ஒவ்வொருவருமே “ஐயோ” என்றுதான் பேச்சையே ஆரம்பித்திருக்கிறார்கள்.  “ஐயோ, ஷுகரா?  ஏன் இப்படி இளைத்து … Read more