மணிகே மகே ஹித்தே

இன்று என் நெருங்கிய சிநேகிதி இந்தப் பாடலை எனக்கு அனுப்பி கேட்டுப் பாருங்கள், இதுதான் இப்போதைய ட்ரெண்ட் என்று சொல்லியிருந்தார். நான் எனக்குப் பிடித்த பாடல்களை முகநூலில்தான் அதிகம் எடுத்துக் கொடுப்பதுண்டு. அதனால் அவர் சில பல மாதங்களுக்கு முன்பே – இந்தப் பாடல் பிரபலம் ஆவதற்கு முன்பே இது பயங்கரமாக பிரபலம் ஆகும் என்று சொல்லி முகநூலில் பகிர்ந்து இருந்தேன். தம்பி பார்க்கவில்லை போல. எனக்கே அனுப்பியிருக்கிறார். சிங்களப் பாடல். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். … Read more

கண்கள் (சிறுகதை)

நான் சக்தி உபாசகன்.  ஆண் தெய்வங்களை வழிபடுவதில்லை.  ஆனாலும் ஸ்ரீ ஜெயந்தியை படு விமரிசையாகக் கொண்டாடுவேன்.  சீடை முறுக்குக்காக.  இந்த ஆண்டு வெறும் அவல் பாயாசத்தோடு முடிந்தது கொண்டாட்டம்.  அநியாயம்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே போயிருக்க வேண்டும். (இந்த வார்த்தையில் ஒரு பிரச்சினை இருக்கிறது.  பிறகு பார்ப்போம்.)  கொரோனா காரணமாகத் தள்ளிப் போட்டேன்.  ஆனால் இனியும் தள்ளிப் போட முடியாது என்று தோன்றியபோது சென்று விட்டேன்.  இருந்தாலும் தேதிகளைப் பார்த்து ஸ்ரீஜெயந்தி வருகிறது என்று தெரிந்திருந்தால் இன்னும் … Read more

இனிய நினைவுகள்…

என் வயது 68.  அதனால் கடவுளைத் தவிர வேறு எதற்காகவும் பயப்பட வேண்டியதில்லை, தயங்க வேண்டியதில்லை என்ற மனோபாவம் வந்துள்ளது.  முன்பேயும் இப்படித்தான்.  இப்போது அது கொஞ்சம் வலுப்பட்டிருக்கிறது.  பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது.  இந்தியா டுடே என் நண்பரும் என் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவருமான வாஸந்தி ஆசிரியர் பதவியிலிருந்து விலகி மற்றொருவர் அதன் ஆசிரியராக ஆகியிருந்த நேரம்.  புதிய பொறுப்பு அவருக்கு.  உதவி ஆசிரியராக இருந்து ஆசிரியர் பொறுப்புக்கு வந்தவர்.  இப்போது தினமலரில் பணியில் … Read more