எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள்

பின்வரும் கேள்வியும் பதிலும் இன்று மாலை நடந்த அக்கப்போருக்கு முன்பே எழுதப்பட்டது. பிடிக்காத எழுத்தாளர்கள் இத்தனை பேரைச் சொல்கிறீர்கள், பிடித்தவர்கள்? காயத்ரி ஆர். பதில்:  என் வாழ்க்கை வரலாற்றையே கேட்கிறாய்.  சொல்கிறேன்.  ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் பிற்பகுதி மற்றும் எண்பதுகளில் நான் பெரிதும் இலக்கியத்தை விடவும் தத்துவவாதிகளையே பயின்று கொண்டிருந்தேன்.  முதலில் படித்தது Émile Durkheim.  இந்தத் தத்துவவாதிகள் பற்றி நான் இப்போது எதுவும் எழுதப் போவதில்லை.  கூகிளில் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.  1980இல் நிலைமை அப்படி … Read more

சாரு இப்படியும் இருக்கிறார்: சமஸ்

முகநூல் என்பதை என் நண்பர்கள் பலர் தங்கள் எழுத்தைப் பலருக்கும் கொண்டு சேர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.  நானும் அப்படியே.  என் தளத்தில் எழுதுவதை முகநூலிலும் பகிர்கிறேன்.  ஆனால் என் நண்பர்களில் பலர் முகநூலில் புழங்கும் பலரது பதிவுகளைப் படித்து பைத்தியமே பிடித்துப் புலம்புகிறார்கள்.  முகநூலிலிருந்து ஒரு வாரம் வெளியே வந்து மீண்டும் நுழைகிறார்கள்.  காரணம், புற உலகில் நாம் ஹலோ கூட சொல்லத் தயங்கும் லும்பன்களின் எழுத்தையெல்லாம் அங்கே படித்து அதை மனதுக்குள் கொண்டு செல்கிறோம்.  கக்கூஸில் … Read more

எனக்குப் பிடித்தவை, எனக்குப் பிடிக்காதவை…

ஜி.குப்புசாமியின் கட்டுரைக்கு எதிர்வினை பின்வருவது. ஜி. குப்புசாமியின் கட்டுரை லிங்க்: https://www.arunchol.com/g-kuppusamy-reaction-for-charu-nivedita ஒரு மாதத்துக்கு முன்பு ராணி திலக் போன் செய்தார்.  எடுக்க முடியவில்லை.  ஔரங்கசீப் முடிந்ததும் அவரோடு பேச வேண்டும்.  ஒரு புதைபொருள் அகழ்வாராய்ச்சியாளரைப் போல் பழைய எழுத்தாளர்களைத் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார் ராணி திலக்.  அதேபோல் நற்றிணை யுகனும் போன் செய்தார்.  அவரும் என் உற்ற நண்பர்.  என்னவோ தெரியவில்லை, ஔரங்கசீப்பை முடிக்காமல் போனைத் தொடவே முடியவில்லை.  இது ஒரு மனநிலை.  புரிந்து கொள்வீர்கள் … Read more