சாருவின் புத்தம் புதிய கவிதை
கனாவிலொரு பூனை
ஆத்மார்த்தியின் குரலில்…

கனாவிலொரு பூனை ஸ்னேகிதீ… உன்னைப் போலத்தான் நானும் மனிதர்களைக் காட்டிலும் பூனைகளையே அதிகம் நேசிக்கிறேன் ஆனால் பூனைகள் வேற்றுக்கிரக ஜீவிகளைப் போல் சிந்திக்கின்றன நடந்து கொள்கின்றன திடீர் திடீரென காணாமல் போய் திடீர் திடீரெனத் தோன்றும் புதிர்த்தன்மை கொண்டவையாக இருக்கின்றன பூனைகளின் மனதில் என்ன இருக்கிறதென்று பூனைகளின் கடவுளுக்கே தெரியாது பூனைகளுக்கே தெரியுமா என்பதும் ஐயம்தான் சமயங்களில் மனம் மிக நொந்து பூனைகளே வேண்டாமென்று வாழ்ந்திருக்கிறேன் சிருஷ்டியின் வினோதம் பூனையின்றி வாழ்க்கையில்லை என்கிறது போ போ மீண்டும் … Read more

சினிமாவும் எழுத்தாளனும்: அராத்து

பின்வரும் குறிப்பு அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியது. இது என் கருத்தும் கூட. பாரதிராஜா தன்னுடைய படத்தின் ப்ரீவ்யூவுக்கு அவரேதான் எனக்கு ஃபோன் செய்து அழைத்தார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறேன். இப்போது அராத்து எழுதியதைப் படியுங்கள்: எனக்கு ஒரு போன்கால். தன்னை அசோஸியேட் இயக்குநர் என அறிமுகப்படுத்திக்கொண்டு , ஒரு படத்தின் ப்ரிவியூ ஷோவுக்கு அழைக்கிறார். சரிங்க என்று சொல்லி விட்டு நான் போகவில்லை. இதற்கு முன்பும் இதைப்போல “யார் யாரோ” சில படங்களுக்கு அழைத்தும் நான் … Read more

சந்தா/நன்கொடை செலுத்த

கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து தங்களுக்கு விருப்பமான தொகையை சந்தாவாகச் செலுத்தலாம். நவீன தமிழிலக்கியம், உலக சினிமா, உலக இலக்கியம், அதிகம் கண்டுகொள்ளப்படாத டிரான்ஸ்கிரஸிவ் லிட்ரேச்சர், அரபி இலக்கியம், உலக அரசியல் என கடந்த 25 ஆண்டுகளாக இந்தத் தளம் உலகத் தமிழர்களுக்கு வழங்கியது ஏராளம். ஒரு பல்கலைக் கழகம் அல்லது தமிழிலக்கிய ஆராய்ச்சி நிறுவனம் போன்ற பெரு அறிவுசார் துறைகள் செய்ய வேண்டியதை ஒற்றை ஆளாக சாரு நிவேதிதா செய்து வந்திருக்கிறார். கடந்த 25 … Read more

24. சொற்கடிகை: இருந்தும் இல்லாமல் இருத்தல்

என் அன்புக்குரிய வாசகி ப்ரியதர்ஷினி ஒரு கடிதத்தில் என்னை மிகவும் நெகிழச் செய்து விட்டார்.  அந்தக் கடிதத்தைப் பலமுறை படித்தேன்.  டியரஸ்ட் சாரு என்று ஆரம்பித்திருந்த அந்த முதல் வார்த்தையில் எல்லையற்ற அன்பின் ஓர் வெளிப்பாட்டைக் கண்டேன்.  அக்கடிதத்தில் அவர் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.  ஒன்று, என்னுடைய மன அழுத்தத்துக்கான தீர்வு எதுவும் சொல்லத் தெரியவில்லை.  ஆனால் அந்த மன அழுத்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.  கடிதம் ”Despite such intolerant stuff happening around, you … Read more

பிரம்ம – நாயகன்

புதுமைப்பித்தனின் செல்லம்மாள் படித்திருக்கிறாயா அதில் வரும் பிரம்மநாயகம் பிள்ளை நான்தான் ஒரு வித்தியாசம் துயரத்தின் குறியீடு அவர் கொண்டாட்ட நாயகன்நான் சடலங்களின் மீது நின்றுகொண் டிருக்கும் நீயா கொண்டாட்ட நாயகனென்றார்  சிலர் வாதையின் ரேகை படிந்த முகமும் சட்ட திட்டங்களின் கடுவிதிகளைக்கொண்ட புனிதநூலுமாகவரும்தீர்க்கதரிசிகளின்அபாய சைகைகளுக்கு எதிரானது என் பாடல் பாழ்பிறவிக்கடலில் மூழ்கி மூழ்கி முத்தறியத் தூண்டுவதுஎன் பாடல் நாடி நரம்புகளில் உச்சம்கொண் டாடுவது என் பாடல் ஆதலால் ஆதலால் என் நண்ப, என்னருகே நெருங்கி வருகையில் சடலம் … Read more

23. சொற்கடிகை: தந்தையும் தனயரும்

சாருஆன்லைன் தளத்தில் வரும் என் எழுத்து எல்லோருக்குமானது.  கட்டணம் இல்லை.  விரும்பினால் நன்கொடையோ சந்தாவோ அனுப்பலாம்.  கட்டாயம் எதுவும் இல்லை.  ஒரு எழுத்து வாசிக்கப்படுவதை விட பெரிய அங்கீகாரம் வேறு எதுவும் இல்லை.  ஆனால் சக எழுத்தாளர்கள், மாணவர்கள், குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்கள் யாரும் சந்தா அனுப்ப வேண்டாம்.  அது நியாயம் அல்ல.  ஆனால், என்னோடு நட்பு கொண்டிருப்பவர்கள் தேருக்கு வடம் பிடித்தே ஆக வேண்டும்.  கையில் காசு இல்லையா?  நேரத்தைக் கொடுங்கள்.  அல்லது, வேறு … Read more